பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழிவு

91


கிளிக் கண்ணி

சிறுவன் : உழைக்க இடமுமில்லை உடம்பில் வலுவுமில்லை பிழைக்க வழியில்லையே-செல்வரே பெருந் துயரம் தீரலையே! பிச்சைக் ! ஐயா, புண்யவானே! குழந்தைகள் பசியால் துடிக்கு துங்க! ஒரு காலணாவாவது போடுங்க. இட்டிலி வாங்கிக் கொடுக்கணும் ஐயா!

செ : உங்க பிச்சைக்காரப் புத்தியைக் காண்பிச் சிட்டியே. சில்லறை யில்லைன்னா போகவேண்டி யதுதானே? வேலையத்த பசங்க வீம்பு பிடிக்கி றானுங்க.

சிறுவன் : ஐயா! நாங்கள் எங்கே போவது? திரும்பத் திரும்பப் பணக்காரங்க கிட்டத்தானே போக வேண்டியிருக்கிறது. உங்களைப் போன்ற பணக்காரர்கள் தான், எங்களைப் பயன்படுத்திக் கொள்ளணுமுங்க.

செ : சரியாய் போச்சு! பயன்படுத்தணுமாம். உங்களை என்னடா பயன்படுத்தறது? என்னடா உளறுரே? சோம்பேறிப் பயலே! .

சிறுவன் : கோவிச்சுக்காதீங்க, ஐயா. எங்களைப்போல ஏழைகளுக்குக் கொடுத்தால் உங்கள் செல்வம் குறைஞ்சு போயிடாதுங்க. உங்களுக்குப் புகழ் உண்டாகுமுங்க. தங்களைப் போல் பணக் காரங்க வாழும் நாட்டில், எங்களைப் போல் பிச்சைக்காங்க வாழ்வது அவமானச் சின்ன மில்லிங்களா? ஐயா! நீங்கள் எல்லோரும் மனம் வைச்சா, இந்த இழி தொழிலை விட்டு, நாங் களும் மனிதராக வாழ முடியுமல்லவா? இல்லேன்னா, இவ்வளவு செல்வமிருந்தும் தங்களுக்கு என்ன பயன்? தங்களால் எங்களுக்குத்