பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழிவு

93


காட்சி : 3

செல்வர் வீடு (செல்வரின் மகள், தமிழ் ஆசிரியர், செல்வர்,

கணக்குப்பிள்ளை , தமிழாசிரியர் செல்வரின் மகள் காமாட்சிக்குப் பாடம் கற்பிக்கிறார்.1

ஆசிரியர் : அம்மா காமாட்சி இன்று ஒரு புறநானூற்றுப்

பாடலைப் படிப்போம். எங்கே, இந்தப் பாடலைப் படி.

காமாட்சி : ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்

ஆசி :

&ss Lijs!" g

ஆசி :

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று

போதும், கொஞ்சம். நிறுத்திக்கொள். இந்தப் பாடலின் ஆரம்பத்தில் எது இழிவு என்பது பற்றி கவிஞர் சொல்கிறார். பாட்டின் கருத்தை விளக்கு முன் உன் கருத்தைச் சொல் பார்க்கலாம். எது இழிவு? உன் மனத்திற் பட்டதைக் கூசாமற் சொல்.

எப்படி ஐயா திட்டமாகச் சொல்வது? ஒவ் வொருத்தருக்கும் ஒவ்வொரு காரியம் இழிவாகத் தெரியும். உலகம் முழுவதிலும் தங்கள் கொடி பறக்காவிட்டால் அது இழிவு என்று ஒரு தேசத்தவர் நினைக்கின்றனர். மற்றொரு தேசத்தவர் தங்களுக்கென ஒர் ஆட்சி இல்லாதது இழிவு என்கின்றனர். அப்புறம்... போதும், போதும். ஒரு சாதாரண விஷயத்தைப் பற்றி வேடிக்கையாகக் கேட்டால், நீ உலக விவகாரங்களையெல்லாம் இழுத்துவிட்டாயே! இந்தக் காலத்து மாணவ மாணவிகளுக்குத் தங்கள் பாடத்தைவிட அரசியல் விஷயம் நன்றா கப் புரிகிறது. -