பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

தமிழ்ச் செல்வம்


காமா : என்ன ஐயா! நீங்கள் என் கருத்தைக் கேட்டீர் கள். எனக்குத் தெரிந்ததைச் சொன்னேன். புற ந்ாறுாற்றுக் கவிஞர் என்ன சொல்லுகிறார் என்பதை நீங்கள்தான் கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன். ஆசி : ஈயென இரத்தல் இழிந்தன்று...அதாவது, 'அம்மா! தாயே பிச்சை போடு என்று யாசிப்பது இருக்கிறதே, அது இழிவானது என்கிறார் கவிஞர். காமா : இதை இரத் தினக் சுருக்கமாய் ஏற்பது இகழ்ச்சி’ என்று ஒளவைப் பாட்டி மிக அழகாகச் சொல்லி யிருக்கிறாளே! (இதைக் கேட்டுக் கொண்டிருந்த செல்வர்) செல்வர் : கணக்குப்பிள்ளை கவனிச்சீரா! பிச்சையெடுப் பது இழிவுன்னு பெரியவங்களெல்லாம் சொல்லி யிருக்காங்க. யார் சொல்லியிருக்காங்கன்னு தெரியுமா கணக்குப்பிள்ளை! கணக்குப்பிள்ளை : தெரியாதுங்களே. செ : வாத்தியாரையா? யாரு சொல்லியிருக்காங்க? ஆசி : புறநானுாறு சொல்லுதுங்க. - செ புறநானூறு. ஆகா இதுக்காகத்தாணய்யா பழைய - நூல்களைப்போற்றிப் படிக்கணும்னு சொல்றது. இதை இங்கே வருகிற பிச்சைக்காரங்களுக் கெல்லாம் சொல்லியனுப்பும் கணக்குப்பிள்ளை! இதை இங்கே வாசலிலும் எழுதிக் கட்டும்! தெரிகிறதா! - கண சரிதாங்க!

(பாடம் தொடர்ந்து நடக்கிறது.i ஆசி : பிச்சை எடுப்பது இழிவுதான். அதனினும் இழி வான செயல் என்று ஒன்று இருக்கிறதாம். அதையும் கவிஞர் சொல்லுகிறார்.