பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இழிவு

95


(அடுத்த அறையில் செல்வரும் கணக்குப்

பிள்ளையும் கூர்ந்து கேட்கின்றனர்.1 அது என்ன ஐயா?

ஈயென இரத்தல் இழிந்தன்று, அதனெதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று தெரிகிறதா? மானங்கெட்டுப் பல்லைக்காட்டி, இழிவையும் கருதாமல் பிச்சையெடுப்பவர்களை நோக்கி, 'இல்லை, போ’’ என்று கையை விரித்து அனுப்புவது இருக்கிறதே. அது பிச்சையெடுப் பதை விட மிகவும் இழிவானது என்கிறார் இப் பாடலாசிரியர். கருத்து ரொம்ப நல்லாயிருக்கு ஐயா? 'ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று. ரொம்ப சரி. (செல்வருக்கு இச்சொற்கள் சுருக்கென்று தைக்

கின்றன.) கணக்குப்பிள்ளை! இந்தப் பாடத்தையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால், மூளை குழம்பிப் போகும். பேசாமே எழுந்து போய் வேறே வேலையிருந்தால் கவனியும். (வாசலில் 'அம்மா! தாயே! பிச்சை போடுங்க

அம்மா!' என்ற குரல் கேட்கிறது.) பொழுது-விடிஞ்சா இதே தொல்லைதான், போ போ, போ. (பக்கத்து அறையில்) ஐயா! கொஞ்சம் பொறுங்கள் பிச்.ை காரனுக்கு ஒரு பிடி அரிசி போட்டு வருகிறேன். (தனக்குள்) கவிதை காமாட்சியம்மாவின் க்ண்ன்ைத் திறந்து விட்டிருக்காப் போலிருக்கு. இந்தந் தயாளகுணம் நீடுழி வாழனும்! அவ்வளவு தான் என் ஆசை.

ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்

ஈய்ேன் என்றல் அதனினும் இழிந்தன்று.