பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்பு

97


அனைவரும் : வாழ்க! வேடர் தலைவர் வேடர் குலத்தின் வீரர்கள்ே! கோலா

கலத்தில் மூழ்கிக் கூத்தாடும் உங்களைக் காணும் போது என் உள்ளமும் ஆனந்தக் கூத்தாடுகிறது. எனினும், வாய்விட்டு மன தாரச் சிரித்து மகிழக் கூடச் ச க் தி யி ல் லா ம ல் தளர்ச்சியடைந்து விட்டேன். வயது முதிர்ந்த எனக்கு, அயராது வேலை செய்யும் ஆற்றல் குன்றிவிட்டது. இனிமேல் உங்களில் ஒருவனைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வதே சிறப்பாகும்.

எங்களுக்குள்ளே தலைவரா? ஏன்? தங்களுக்குப் பின் எங்கள் தலைவராயிருக்க வீரம் செறிந்த இரு மக்களைத் தந்திருக்கிறீர்களே! வழக்கப்படி, அவர்களில் ஒருவரே தலைவராக வரவேண்டும்.

தலைவன் : காடரே வழக்கத்தை நான் மறந்துவிட

நாக :

தலை :

வில்லை. என்றாலும், வனவிலங்குகளிடையே கலந்து உறவாடி வீர வாழ்க்கை நடத்தும் நமது குலத்தினருக்குக் கோழையொருவன் வழக்கம் என்ற பெயரால் தலைவனாக வந்துவிடக்கூடாது என்பதே என் எண்ணம்.

தலைவரே! தாங்கள் கூறுவதைப் பார்த்தால், தங்கள் வீரப் புதல்வர்களைக் கோழைகள் என் றல்லவா கருதியிருப்பதாகத் தோன்றுகிறது; அப்படித்தங்கள் திருவுள்ளம் நினைத்திருந்தால். அது தவறு என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம். தங்களுக்குப்பின், எங்களுக்குத் தலைவராய் இருக்கும் ஆற்றல் தங்கள் மைந்தர் இருவரிடமும் உள்ளது. / உங்கள் அனைவருடைய எண்ணமும் அது வானால், அப்படியே ஆகட்டும். என் மக்கள் இருவரில் தலைமைக்குத் தகுதியுடையவன் எவன்? தெரிந்து கொண்டீர்களா?

த.-7