________________
ரகர, றகரச் சொற்களின் வேறுபாடுகள் உரவு - வலிமை,உப்பு உறவு - கலந்து வாழ்தல் உராய்தல் -- தேய்தல் உரி கழற்று, தோலுரி, மரப் பட்டை, அரைப்படி, சுதந் தரம் உறி - (நெய், மோர்) உறி உரிமை - சுதந்தரம் உரிய - சொந்தமான உறிய - உறிஞ்ச உரு - வடிவம், உருவம் உறு - பொருந்து, மிகுதி உருக்கு - இளகச்செய் உருசி - சுவை உறுதி-திடம் உறுப்பு - அவயவம் உருமு - இடி உறுமு - கர்ச்சி உருள் - சுழல் உருவி-நாயுருவி, பிடுங்கி உரை - சொல், தேய் உறை இறுகு, மூடி, இடம், (தலையணை உறை) உறைப்பு - காரம் உற்பத்தி - தோற்றம், துவக்கம் ஊர - நகர, பரவ ஊற - சுரக்க, நனைய ஊருணி - ஊரார் உண்ணும் நீர்க்குளம் ஊறு - இடையூறு ஊறுகாய்-ஊறவைத்த காய் எரி-தீ, நெருப்பு, எரிதல் எறி - விசு, வீசி யெறி எரு - வரட்டி, மலம் எருமை - மாடு (காரா) எருக்கு ஓர் செடி எறும்பு - ஒரு பிராணி ஏரி-பெரியகுளம், நீர்நிலை ஏறி - மேலே ஏறி ஏர் - உழவு ஏர் ஏராளம் - மிகுதி ஏமாறு - வஞ்சிக்கப்படு ஏற்பாடு - திட்டம் ஐயுறவு - சந்தேகம் ஒரு - ஒன்றாகிய ஒறு - தண்டி கக ஒற்றன் - தூதன் கர - ஒளிந்துகொள் கற - பால் கற, பீச்சு கரி-யானை, அடுப்புக்கரி கறி - கடி; (காய்) கறி; மிளகு கருத்து - எண்ணம் கறுத்து - கோபித்து, சினந்து கருப்பு-பஞ்சம் கறுப்பு - கருமை நிறம் கரும்பு - கன்னல் கருமாயம் - மிகுதியான விலை கருவி - ஆயுதம் கறுவி - கோபித்து கரை - ஓரம், குளக்கரை கறை - களங்கம், மாசு, குற்றம் கறையான் - செல் கவர் - அபகரி கவறு - சூதாடு கருவி கவற்சி - துன்பம் (கவல் பகுதி) காரணம் - முதல், எது காரியம் - செயல் கிரி - மலை கார் - மேகம் காறல் - காறியுமிழ்தல் கிராமம் - சிற்றூர்