________________
ரகர, றகரச் சொற்களின் வேறுபாடுகள் மருமகள் - மகன் மனைவி தல் மருமகன் - மகள்கணவன் மருவல் - பொருந்து மருவீடு - மணமக்களை வீட் டுக்கழைத்தல் மரை - ஒரு மான், திருகுசுரை, தாமரை மறை - ஒளித்தல், வேதம், இரக சியம் மாரன் - மன்மதன் மாறன் பாண்டியன் மாரி மழை மாறி - வேறுபட்டு முறம் - சுளகு முரண் - மாறுபடுதல் முரி - ஒடி, கெடு முறி - தளிர், இலை, பட்டையம் முருக்கு - ஒரு மரம் முறுக்கு - திருக்கு, அதட்டு, தின் பண்டம் முருகன் - அழகன், கந்தன் முருகு-வாசனை, அழகு, இள மை முறுகு - திருகு, பதங் கடந்து வேகு முருங்கை - ஓர் மரம் முருடு - முரடு மெய்யுரை - உண்மைச் சொல் மெய்யுறை - கவசம், அங்கி வரம் - அருள் வறம் - வறட்சி கரு வரலாறு - சரித்திரம் வருத்தல் - துன்பப்படுத்தல் வறுத்தல் - காய்களை வறுத்தல் வறுவல் - வறுத்தகறி வறுமை - தரித்திரம் வரை - மலை,மூங்கில்,அளவு, வரி பொ வறை - துவட்டற்கறி, ரித்த காய்கறி வர்க்கம் - இனம் வற்புறுத்து - வலிந்து சொல் விசிறி - காற்றசைகருவி விரகு - தந்திரம் விறகு - எரிக்குங் கட்டை விரல் - கைவிரல் விறல் - வெற்றி, வலிமை விருப்பம் - ஆசை விருந்து - உணவளித்தல் விரை - விதை, வேகமாகு விரைவு - வேகம் விறை - கடினமாகு, மரத்துப் வீரி - காளி வீறி - ஓங்கி [போ வீறிட்டு - சத்தமிட்டு அலறி வீற்றிரு - சிறந்திரு வெரு - பயம், அச்சம் வெறு-பகை, மிகுதல், வெறுப் புக்கொள் வெறுமை - ஒன்றுமில்லாமை வேர் - மரவேர் வேறு - மற்ற [குறிப்பு :- காறல், காரல்; சுறண்டு, சுரண்டு; சுறீர், சுரீர்; தறுவாய், தருவாய் ; நறுக்கு, நருக்கு ; முறி, முரி; என்னுஞ் சொற்கள் வேறுபாடின்றி வழங்குகின்றன.