________________
ககா பிழை நீக்கி எழுதுமுறை . 3. ளகர, ழகரச் சொற்களின் வேறுபாடுகள் அளகம் - பெண்மயிர் அளகு - பெண் பறவை, கோழி அழகு - அல்ங்காரம் அளம் - உப்பளம் அளி - வண்டு,அருள்,கா அழி - கெடு அழுக்கு-மாசு, பொறாமை அளை - துழாவு,கல, தயிர், குகை அழை - கூப்பிடு, பெயரிடு அள் - அள்ளு ஆழம் - பள்ளம் ஆளி - அரசன், ஆள்வோன், சிங் கம் ஆழி - கடல்,சக்கரம், மோதி ரம் ஆள் - புழங்கு, அரசுசெய், ஆண் மகன், ஊழியன் ஆழ் -அமுக்கு, தாழ்த்து ஆள்வார் - ஆளுவோர் ஆழ்வார் - திருமால் அடியவர் இளகு - நெகிழ்தல் இழ -தொலை,போக்கடி இளை - மெலிதல், களைத்தல் இழை - தேய், செய், நூல் உளம் - உள்ளம் உளவு - வேவு, மறைவு உழவு - பயிர்த்தொழில், வருத் தம், முயற்சி உளறு - பிதற்று உளி - தறிக்குங் கருவி உழி-இடம், ஏழாம் வேற்றுமை யுருபு உளுக்கு - சுளுக்கு உழுந்து - ஒருவகை தானியம் உளை - நோகு, சேறு, பிடரிமயிர் உழை - வருந்தி வேலைசெய், மான், பக்கம் எழுதல் - உயர்தல்,கிளம்பு தல், வரைதல் எழுத்தாணி துங் கருவி - ஒலையிலெழு எள் - நிந்தை, ஒரு தானியம், எளிமை எளிது - இலேசு எளிய - அற்ப ஒளி - மறை,வேதம், வெளிச்சம், புகழ் ஒழி - அழி, நீக்கு களம் - போர்க்களம், நெற் களம் களர் - விளையா நிலம் களவு - திருட்டு களி - மகிழ்ச்சி கழி - நீக்கு, கோல், மிகுந்த களை - முகவழகு, நீக்கு, இளை கழை கோல், கரும்பு, மூங்கில் கள் - மது களிம்பு - துரு, பூச்சு மருந்து கழுகு - ஒரு பறவை கழுதை - ஒரு விலங்கு கழுவல் - தூய்மை செய்தல் காளி - துர்க்கை காழி - சீகாழி காளை - எருது, வாலிபன் கிளவி - சொல் (எழுதாக்கிளவி) கிழவி - உரியவள், முதியாள் கிழி - கிழித்தல்,பணமுடிச்சு கீள் - கோவணம், தோண்டு கீழ் - கீழே, தாழ்வு