பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

உவமைக்கவிஞர் சுரதா


Voters - வாக்காளிகள்

இனி அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தைக் கவனிப்போமாக, ஒவ்வொரு கிராமத்தின் பிரிவினைகளிலுள்ள முக்கிய இடத்தில் ஒரு பானை வைக்கப்பட்டிருந்தது. அது உண்டியல் போல் சிறிய துவாரத்தை யுடையதாயிருந்தது. அந்தத் துவாரத்தின் வழியாய் பனை ஓலைச் சீட்டுகள் போட இடமிருந்தது. தேர்ந்தெடுக்கும் மனிதர்கள் (ஓட்டர்கள் வாக்காளிகள்) பனை ஓலைச்சீட்டில் பேர் எழுதிப் போட்ட பின்னர் அந்தப் பானையிலுள்ள சீட்டுகள் மகாஜன சபைகள் கூடுமிடத்தில் வேறொரு காலிப்பானையில் குலுக்கிப் போடப்பட்டன.

நூல் : நமது பரதகண்டம் (1926) இரண்டாம் பாகம், அத் - 3. சரு - 6, தமிழகத்தின் நாகரிகம் - பக்கம் - 93
நூலாசிரியர் : வை. சூரியநாராயண சாஸ்திரி, M.A., L.T,
Supreme Bliss – அறிவியப்பு

மனமென்பது சார்போத மெனப்படும். ஏனெனில் மனம் எதைப்பார்க்கிறதோ, அதன் சார்பாய் விடுதல். இங்ஙணம் மனமென்பது காற்றென்றும் விவேக மென்பது அனலென்றும் வியாபக அறிவென்பது சுத்த ஆகாயமென்றலுமாம். உன்னுகின்ற தொழிலையுடைய மனம் காற்றுருவாய் நின்று, தீர்க்க சிந்தயிைல் அனல் வடிவாகி விவேகமெனப் பேர் வகித்து வியாபக வடிவாய் சுத்த சாதக நிலையில் தன் வன்மை குன்றி, உலக நாட்டமிழந்து காற்றுக்குமேல் மிருதுவான தன்மையையடைந்திருக்குந் தருவாயில், சுத்த சாந்த உஷ்ணந் தோன்றி இயற்கை வடிவாகி சுயம்பிரகாசமாகி எக்காலத்தும் அழிவில்லாததாய் விளங்கிக்கொண்டிருக்கின்ற உண்மை நிலையெதுவோ அதுவே அறிவியப்பாம்.

நூல் : அருள்சிவம் (1926)
6 அறிவியப்பு, பக்கங்கள் - 31, 32 நூலாசிரியர் : திரு. சாம்பசிவம்
Self Realization – தனிநிலை இயல்பு

தனி யென்பது மூன்று அவத்தைகளையும் நன்று விசாரித்து வாதனா வசத்தில் வருகிற விருத்தியைக் களைந்து அவ்விருத்திகள் அடக்கத் துருத்திபேல ஊது மூச்சை ஓரிட மமர்த்தி யூன்றி நிற்றலே சிவயோக நிலை.