பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

உவமைக்கவிஞர் சுரதா


பகிரங்கக் கடிதம் - திறந்த மடல்

ஒத்துழையாக் காலத்தில் இங்கிலீஷ் மக்களுக்குக் காந்தியடிகள் எழுதிய திறந்த மடலில் (பகிரங்கக் கடிதத்தில்) எனது அன்பார்ந்த நண்பர்களே என்று அவர்களை அடிக்கடி விளித்தமை காண்க.

நூல் : மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் (1926 பக்கம் : 380
நூலாசிரியர் : திரு. வி. கலியாணசுந்தரனார்
ஆத்ம சக்தி - உள்ளொளி

தியாகம் ஒருவனது பருஉடல் உணர்வை அரித்து அரித்து உள்ளொளியை (ஆத்ம சக்தியை ஒளிரச் செய்யும்.

மேற்படி நூல் : பக்கம் : 179
பிராயச் சித்தம் - கழுவாய்

காந்தியடிகள் தமக்குள்ள மேல் நாட்டு அறிவு துணைகொண்டு பிணங்கி நில்லாது தமையனார் ஆணைக்கிணங்கிக் கழுவாய் (பிராயச் சித்தஞ் செய்து) கொண்டார்.

நூல் : பக்கம் : 117
அநுபவம் - அடைவு

உண்மை இல்லா உள்ளம் என்றும் அச்சத்தால் பிடித்தலையும், அது பொலியும் உள்ளம் அச்சத்தால் பிடிக்கப்படாது அஞ்சாமையில் வீறுகொண்டு நிற்றலையும் விளக்கிக்கூற வேண்டுவதில்லை. அவரவர் அடைவு (அநுபவம்) அவரவர்க்கு இவ்வுண்மையை அறிவுறுத்தும்.

மேற்படி நூல் : பக்கம் - 58
வீரலெக்ஷுமி - விந்தைமகள்

கன்னிப்பேரில் விஜயம் பெற்ற செழியன், அக்காலத்திலேயே வீரராவார்க்குச் செய்யத்தகும் களவேள்வியை முறைப்படி செய்யலானான்.