தமிழ்ச் சொல்லாக்கம்
9
இவர் ஆத்திகத்தை அறவே எதிர்க்கிறார்; நாத்திகத்தை முற்றாக வளர்க்கிறார்.
இலக்கியத் தேனீயாகவும் வரலாற்றுச் சுவைஞராகவும் வாழ்பவர் சுரதா!
எழுத்தாளர்க்கும் இளங்கவிஞர்க்கும் ஊக்கந் தருபவர். பேராசிரியர்க்கும் பாடக் குறிப்புகள், நுண்மைச் சிறப்புகள் உணர்த்துவார்.
பக்தியை நம்பாத சுரதா, பக்தி வளர்க்கும் பைந்தமிழை மதிப்பார்; சுவைப்பார்.
புதிய சொல்லாக்கத்தில் ஆர்வமிக்க இவர், புதுப்புதுச் சொற்கள் எங்கே பிறந்தாலும் அதைக் கண்டு வியப்பார்; மகிழ்வார்; பரப்புவார்!
முட்டை என்பது ஒரு விதை என்று கூறிய இளங்கவிஞரை இதயந் திறந்து பாராட்டிப் பரிசும் அளித்தார்; பிறரையும் அவ்வழியில் ஊக்கங் கொள்ளச் செய்தார். இவ்வகையில் புத்தார்வங் கொண்டோர் பலராவர்.
வடசொற்கள், ஆங்கிலச் சொற்கள் முதலான வேற்றுமொழிச் சொற்களைப் பலரும் பல காலங்களில் தமிழ்ச் சொற்களாகப் படைத்தனர்; படைத்து வருகின்றனர்.
இன்று நம்மில் பலர் அப்புதிய சொற்களைக் கையாள்கிறோம்.
ஆனால் புதிய தமிழ் வடிவம் தந்தவரை நினைவில் கொள்வதில்லை. எப்பொழுது, யாரால், எந்த நிலையில் மொழியாக்கம் நிகழ்ந்தது என்பதைப்பற்றி நாம் கருத்தூன்றிப் பார்ப்பதில்லை.
சுரதா அவர்கள் அப்படி ஒதுங்கி விடுவதில்லை. முனைந்து அதைக் கவனிப்பார். குறித்து வைப்பார். பிறர்க்கும் உரைப்பார். அவ்வகை அரும்பணியின் தொகுப்பே இந்நூல். சொற்கள் பிறந்த காலம், இடம், நூல் எனும் முழு விவரங்களும் தொகுத்லு வைத்தார். அதுவே ஒரு நூலாய் வெளி வருகிறது.
இந்நூல் ஒரு திரட்டு சுரதாவின் தேன் கூடு!
சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட