108
உவமைக்கவிஞர் சுரதா
எசென்சு (சத்து) அபிஷேகம் : கோவில்களில் உள்ள சுவாமிகட்கு அபிஷேகம் செய்கையில் பன்னீர் அபிஷேகம் செய்கிறார்கள். பன்னீரானது ரோஜாப் புஷ்பத்தின் எசென்சு (சத்துரசம்) ஆகும். ஆனதால் அதைப்போல இனி, பழவர்க்கங்களையும் எசென்சாக வாங்கி அபிஷேகம் செய்தால் வேலை குறையுமென்று குருக்கள்மார்கள் தேவஸ்தான போர்டாரைக் கேட்டுக் கொள்ளப் போகின்றாராம்.
இதழ் | : | ஆனந்த விஜய விகடன் (1928, செப்டம்பர்) தாய்- 1, |
பிள்ளை - 8 பாக்கட் விகடங்கள், பக்கம் - 335 | ||
ஆசிரியர் | : | விகடகவி பூதூர். வைத்தியநாதையர் |
நவீன நாகரிகத்தில் முற்றிய ஆண் பாலர்கள் தங்கள் சட்டைகளில் (ஒப்பன்கோட்) என்கிற திறப்புச் சட்டையை அணிவது போல மாதர்களும் திறப்பு ரவிக்கையை அணிய நாயகன்மார்கள் உத்தரவு தர ஏறபாடு செய்ய வேணுமாய் கோருகின்றனர்.
இதழ் | : | ஆனந்த விஜய விகடன் (1928, ஜூன்) |
தாய் - 1, பிள்ளை - 4 | ||
4 பாக்கட் விகடங்கள் - பக்கம் - 195 | ||
நூலாசிரியர் | : | விகடகவி பூதூர், வைத்திய நாதையர் |
என்னுடைய கடையைப் பெரிதாக்க எண்ணங்கொண்டு நான் ஏற்கனவே கட்டியிருந்த கடையைச் சேர்ந்தாப் போல் பெரிய ஷாப்பாக பக்கா கல் கட்டடம் ஒன்றைக் கட்டியும், அதற்கடுத்தாப் போல் சில கிடங்குகளைக் கட்டியும் அதில் என் வியாபாரத்தை வைத்து நடத்தலானேன். அப்போது இந்தியா இன்னும் அனேக ஊர்களிலிருந்தும், இந்திய ஆண் பெண் இரு ஜாதியாருக்கும், ஐரோப்பிய ஜாதியாருக்கும் வேண்டிய சகல சாப்பாட்டு சாமான்கள், துணி, மணி முதலிய எல்லாச்சாமான்களும் வரவழைத்து வைத்தும், அவ்விடத்திலும் பக்கத்து கிராமங்களிலும் விளையும் சகலவித விளைவுப்பொருள் (Produce) களையும் ஒப்பந்தமாக வாங்கி அவ்விடத்திலும் மற்ற இடங்களிலுமுள்ள வியாபாரிகளுக்கு