பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

உவமைக்கவிஞர் சுரதா


வசனம் - உரைநடை
ரசவாதிகள் - பொன் செய்வோர்
நூல் : மதிமோச விளக்கம் (1929)
(நான்காம் பதிப்பு) பக்கம் : 4
மொழியாக்கம் : நா. முனிசாமி முதலியார்
('ஆனந்த போதினி' பத்திராதிபர்)
அந்தப்புரம் - உள்ளறை

'அந்தர்' என்னும் வடமொழித் திரிபு ஆதலால் தற்பவம்.

நூல் : நீதிநெறி விளக்கம் மூலமும் விருத்தி உரையும் (1929) பக்கம் : 35
நூலாசிரியர் : சோடசாவதானம் தி. சுப்பராய செட்டியார்


பிரதமை திதி - முதல்நாள்
துவிதியை திதி - இரண்டாம் நாள்
திரிதியை திதி - மூன்றாம் நாள்
சதுர்த்திய திதி - நான்காம் நாள்
பஞ்சமி திதி - ஐந்தாம் நாள்
சஷ்டி திதி - ஆறாம் நாள்

முருகன் வரத்தில் அசுரர்கள் பிறந்து தேவர்களுக்கிடுக்கண் செய்வதையொழிக்க சிவன் தனது மனையாளிடம் மோகிக்குங்கால் அவர் கண் வழியாக ஐப்பசி மாத பூர்வக்ஷத்துப் பிரதமை திதியில் (முதல்நாள்) காமமாகிய வீரியந் தோன்றிற்று. அந்த விந்தே துவிதியை திதியில் (இரண்டாம் நாள்) பார்வதி கருப்பையிற் செலுத்தப்பட்டது. அதே விந்து திதியைத் திதியில் (மூன்றாம்நாள்) பார்வதி கருப்பையிலிருந்தெடுத்து, அக்கினி பகவானிடம் கொடுக்க அவனந்த அசுசியை வகித்திருந்து சதுர்த்திய திதியில் (நான்காம் நாள்) கங்கை நதியில் எறிந்துவிட, கங்கை நதி அக்கலிதத்தைச் சரவண குட்டையில் ஒதுக்கிவிட அவைகள் ஆறு குழந்தைகளாக அக்குழந்தைகளுக்குப் பஞ்சமி திதியில் (ஐந்தாம் நாள்) கிருத்திகா தேவிகளால் பாலூட்டி உயிர் நிறுத்த சஷ்டி திதியில் (ஆறாம் நாள்) பார்வதி தன் கணவனுடன் வந்து அந்த ஆறு குழந்தைகளையும் அந்தக் குளத்திலிருந்து சேர்த்தெடுக்க ஆறு தலைகளும், பன்னிரு புஜங்களும், உடல் ஒன்றும் கால்களிரண்டுமாய்த் திரண்டு விட்டதாம். இந்த இயல்பலாத பிறப்புடையவன்தான் ஆறுமுகனாம்.