பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

117


நூல் : ஸ்ரீ ஆறுமுகக் கடவுள் வரலாறு முதற்பதிப்பு (1930) பக்கம் - 27
நூலாசிரியர் : க. அயோத்திதாஸ் பண்டிதர்


Desert - விளைவிலாப் படுநிலம்

முருகன் பிறந்தது இமயமலை கங்கை நதி யோரத்துச் சரவண குளமாயிருக்க, வானலோக மேறுந்திடன் முருகனுக்கேதோ? பார்ப்பார் மத விஷ்ணு விளைவிலாப் படுநிலமுள்ள (Indian Desert) ஆரிய வர்த்தனமென்னும் வைகுந்த ஊராகிய ராஜ புத்தானா வருகிலும், பிரமன் பர்மா தேசத்திலும், சிவன் காஷ்மீர் தேசத்திற்குச் சிறிது வடகிழக்கில் சுமார் நூற்றிஐம்பது மைல் தூரமுள்ள கைலை மலை குகையிலு மிருந்தார்க ளென்றால், தேவேந்திரன் வானலோகத்திலிருந்திருப்பானா? அல்லது அமராவதி ஆற்றோர மிருந்திருப்பானா? வென்று நீங்களே நினைத்துப் பாருங்கள்.

நூல் : ஸ்ரீ ஆறுமுகக் கடவுள் வரலாறு முதற்பதிப்பு (1930) பக்கம் - 30
நூலாசிரியர் : க. அயோத்திதாஸ் பண்டிதர்
Magic Lantern — படக்காட்சிக் கருவிகள்

சொற்பொழிவாளர்கள் பலரை அமைத்து அவர்கட்குத் தக்க ஊதியங்கள் அளித்து இச்சென்னை நகரின் மட்டுமேயல்லாமற் சென்னை மாகாண முழுமையும் அளவிலாச் சொற்பொழிவுகள் அங்கங்கும் நிகழ்த்தி நம்மவர்களைப் புலால் மறுக்கும்படி செய்தல் வேண்டும். விரிவுரைகட்குப் படக்காட்சிக் கருவிகளும் (Magic Lantern) பயன்படுத்துதல் வேண்டும்.

நூல் : ஏன் புலால் மறுத்தல் வேண்டும்? (1930)
ஒரு வேண்டுகோள் - மேலட்டையின் மூன்றாம் பக்கம்
நூலாசிரியர் : பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை
பூவராகம் (பிள்ளை) - நிலப்பன்றி (1930)

1929-ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருப்பெற்றது. அக்கழகத்தின் புலவர் பயிற்சிக் கல்லூரியும் புகுமுக வகுப்பும் தில்லையில் இருந்தன. 1930ஆம் ஆண்டில் பூவராகனார், இக்கல்லூரிகளின் ஆசிரியராக அமர்ந்து திறமையாகப் போதனை புரிந்தார். பிறகு 1938ஆம் ஆண்டில் புலவர் வகுப்புகட்கு ஆசிரியரானார்.