பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

121


Honey Moon – தேன்மதி

தேன்மதி என்பது ஆங்கிலத்தில் ஹனிமூன் என்னும் வார்த்தையின் நேர் தமிழ் மொழி பெயர்ப்பாகும். ஆங்கிலத்தில் இவ்வார்த்தையின் அருத்தம் யாதாயினும் ஆகுக. அதனுடைய தமிழ்மொழி பெயர்ப்பு மிக்க அழகாகவும் ஆழ்ந்த கருத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கிறது. தேன்மதி என்றால் கன்னி யென்னும் பதத்திற்கு இசைய, அப்பருவத்தில் நடந்து கொள்ள வேண்டிய நெறிக்குச் சிறிதும் பங்கமின்றி யொழுகிய ஒரு பெண்ணும், உண்மைப் பிரமசாரியாக விளங்கும் ஓர் ஆணும், பெற்றோர் மற்றோரால் விவாகம் எனப்படும் சடங்கின் வழியதாக இன்ப சுகத்தை அனுபவித்தலே யாகும்.

இதழ் : விவேக போதினி, ஜூலை 1930
தொகுதி : 22 பகுதி - 7
கட்டுரையாசிரியர் : ச. தா. மூர்த்தி முதலியார்
பரஸ்பரம் - ஒருவர்க்கொருவர்

மதங்களின் ஏற்றத் தாழ்வை யுன்னி யானை கண்ட குருடர்போல் பரஸ்பரம் (ஒருவருக்கொருவர்) கலகம் விளைவித்துக் கொள்ளா நிற்கும் மதஸ்தர்களென்பான், துயதிது தீயதிது வென்னு மாக்கள்' என்றும், இவ்வாறு மதஸ்தர்கள் தத்தம் சித்தாந்தத்திற் கேற்ற தத்துவத்தைக் கொள்ளினும் அவர்கள் யாவருக்கும், விரோதமின்றி அவ்வத் தத் வமாயிலங்குபவன் இறைவன் என்பான் 'அது வதுவா யிறை யிருக்கும்' என்றும், அதுபோல் யாமும் மதஸ்தர்க ளெல்லாரோடும் விரோதமின்றி யொழுகுவோமாக வென்பான், 'இறை இருக்கும் படியேயா யிருக்க என்றும் கூறினார்.

நூல் : சசிவன்ன போதம் (1930) பக்கம் - 9
நூலாசிரியர் : காஞ்சி நகர் ஆ. செங்கல்வராய முதலியார்
: (தருக்க வேதாந்த போதகாசிரியர்)
பீதாம்பரம் - மின்நூல் ஆடை
நூல் : நூல் புள்ளிருக்கும் வேளுர் தேவாரம் (1929)
பதிப்பித்தவர் : ச. சோமசுந்தர தேசிகர்
: (வைத்தீசுவரன் கோயில்)