பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

125


Will - இறப்பு ஏற்பாடு

ஓர் அரிய விருந்திற்கு ஓரறிவாளர் வந்திருந்தார்; ஒரு பணக்காரனும் வந்திருந்தன். பணக்காரன் தற்பெருமை வாய்ந்தவனாதலின், அறிவாளர் அவனை அணுகவில்லை. அதனால் மனம் புழுங்கிய செல்வன், மதிவலாரை நோக்கி, யான் ஒரு கோடீஸ்வரன் என்பது உனக்குத் தெரியாதா? - எனக் கடுங்குரலில் கழறினன். அதற்கவர் மிக்க அமைதியுடன், அவ்வளவுதான் உனது பெறுமானமென்பது எனக்குத் தெரியும் என்றார். இத்தகைப் பெரியாரொருவர், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் உயரிய உணர்வுடன் அழகுபட எழுதி வைத்திருக்கிற இறப்பு ஏற்பாடு (Will) பின்வருமாறு அமைந்துள்ளது.

நூல் : கட்டுரை மலர் மாலை 1993
கட்டுரை : செல்வமும் வறுமையும், பக்கம் - 105, 106
க.ப. சந்தோஷம் - மகிழ்நன் (1934)
மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள்

இந்நூலிலே தொகுக்கப் பெற்ற கட்டுரைகள் ஆனைத்தும் சைவசித்தந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் பத்தாண்டுகளாக வெளியிடப் பெற்றுவரும் செந்தமிழ்ச் செல்வி என்னும் திங்கள் தாளிற்கு யான் இடையிடையே எழுதி வந்தனவாகும்.

ஆங்கில மொழியில் நல்லிசைப் புலவர்களான ஸ்டீல் (Steele), அடிசன் (Addison), கார்லைல் (Carlyle), கோல்ட் ஸ்மித் (Gold-smith) முதலியவர்கள் சொற்சுவை பொருட்சுவை நகைச்சுவை நிரம்ப எழுதிய கட்டுரைகள் அம்மொழி பயிலும் மாணவர்கட்கு உவகையூட்டிப் பயன்படுவன போலத் தமிழ் பயிலும் மாணவர்கட்கு இந்நூற் கட்டுரைகள் பயன்படுமென்று கருதுகின்றேன். இதனைக் கல்லூரித் தலைவர்களும், தமிழாசிரியர்களும், மாணவர்கட்குப் பாட புத்தகமாக ஏற்று உதவி, என்னை ஊக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

மகிழ்நன்
நூல் : மகிழ்நன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் (1934 பக். 7, 8
நூலாசிரியர் : மகிழ்நன்
பிராணாயாமம் - மூச்சடக்கி விடுதல்

உடற்பயிற்சி தேக உழைப்பில்லாத உடலின் நலத்திற்கு இன்றியமையாததது. நடத்தல், மலையேறுதல், கருவியின்றி உடற்பயிற்சி செய்தல்,