பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

உவமைக்கவிஞர் சுரதா


தோட்டம் பயிரிடுதல், மரமறுத்தல், மூச்சடக்கி விடுதல் (பிராணாயாமம்) முதலியன சாதாரணமான உடற்பயிற்சி முறைகளாகும்.

நூல் : உடல் நூல் (1934), பக்கம் - 41
நூலாசிரியர் : கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ., எம்.எல்.
முத்துகிருஷ்ணன் - மணி நீலன்
Anatomy - உடற்கூற்று நூல்
Physiology – உடற்செயல் நூல்

உடலின் பல பகுதிகளின் அமைப்பைப் பற்றிக் கூறுண் நூல் (Anatomy) உடற் கூற்று நூலெனப்படும். அவற்றின் செயலைப் பற்றிக் கூறும் நூல் (Physiology) உடற்செயல் நூலெனப்படும். இரண்டும் உடல் நூலென்பதிலடங்கும்.

நூல் : உடல்நூல் (1934) முன்னுரை பக்கம் - 1
நூலாசிரியர் : கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ., எம்.எல்.
Proto - plasm – முதற் சந்து

ஒரு நீர்த்துளியைப் பூதக் கண்ணாடி வழியாய்ப் பார்க்கும் பொழுது அதில் காணப்படும் மிகச் சிறிய உயிர்களின் உடலொன்றினை நுணுகி நோக்கின் அது குழைவான கண்ணாடி பேன்ற சத்தின் நுண்ணிய பிண்டமாகக் காணப்படும். அதனை அறிவியல் நூலார் முதற்சத்தென்பர் (Proto-Plasm).இம் முதற் சத்தானது மிக நுட்பமான உணவுத் துகள்களையுடையது. அதன் ஒரு பகுதியில் வித்துப் போன்ற ஓரிடம் காணப்படும். அதுவே அதன் உயிர்ப்பகுதி.

நூல் : உடல் நூல் (1934) முன்னுரை - பக்கம் -2
நூலாசிரியர் : கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ., எம்.எல்.
Living Cell – உயிர்வாழ் சிற்றறை சிற்றணுக் கூடு

வித்தோடு கூடிய முதற் சத்தினை உயிர்க் கருவென்னலாம். அது ஒரு சிற்றறை போன்றிருத்தலால் அதனை உயிர்வாழ் சிற்றறை (Living Cell) யெனவும் சிற்றணுக் கூடெனவும் நூலோர் கூறுவர்.

மேற்படி நூல் : முன்னுரை : பக்கம் - 2