உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

11



Geometry – அளவு நூல்

ண்டிதமான அளவு நூலில் குத்துக்கு யாதொரு பெருமையும் இல்லை. (அதாவது) நீட்சியும் இல்லை, அகலமும் இல்லை, கனமும் இல்லை. கோட்டுக்கு நீட்சி மாத்திரம் உண்டேயன்றி, அகலமும் இல்லை, கனமும் இல்லை. ஆகையால், வழக்கத்தில் குத்துக்களையும், கோடுகளையும், இந்த வரையறுப்பு வாக்கியங்களின் கருத்துக்கு எவ்வளவோ சமீபமாய்ப் பொருந்தும்படி நாம் எடுக்கிறோமோ, அவ்வளவு, அவற்றின் மீது சார்வாய் இருக்கும் வேலைகள் திருத்தமாய் இருக்கும்.

நூல் : அளவு நூல் (1857), இரண்டாம் புத்தகம், பக்கம் - 4
நூலாசிரியர் : தாமஸ் லுண்டு, B.D.
விசுவகன்மியம் : சிற்ப நூல்

செவித்துவாரம் - ஓசைப்புழை
சுக்கிலம் - வீரியம்
சாதாரணம் - பொது
நூல் : சிவதருமோத்தரம் மூலமும் உரையும்
(மறைஞான சம்பந்த நாயனார்)
நூலாசிரியர் : தாமஸ் லுண்டு, B.D.
உரையாசிரியர்
குறிப்புரை
: திருநெல்வேலி சாலிவாடீசுர ஓதுவாமூர்த்திகள்
புநர் விவாகம் - மறுமணம்

மேல் விவரித்த வேத வசனங்களாலும் ஸ்மிருதி வசனங்களாலும் புருஷ சங்க நேர்ந்திராத கைமைகளுக்குப் புநர்விவாகஞ் செய்வது வேத சாஸ்திர சம்மதமென்றும், சில பிராம்மண ஜாதியில் இப்போதும் மறுமணம் நடந்தேறி வருகிறதாக ஜகநாததர்க்க பஞ்சானன வியாக்கியானத்தினால் தெரிய வருகிறபடியாலும், மேற்குறித்த வசனங்களின் ஆதாரத்தின் பேரில் மறுமணஞ் செய்து கொள்வதாய் தமயந்தி சுயவரம் சாட்டினதாக நளசரித்திரத்தினால் தெரிய வருகிறபடியாலும், பல்லாரி ஜில்லாவில் லிங்க பலஜளூ என்கிற மிகவும் மேன்மை பெற்ற குலத்தாளில் சீரையுடுக்கி என்கிற மறுமணம் இப்போதுஞ் செய்யப்பட்டு வருவதாலும், இன்னம் சில இந்து ஜாதிகளில் மறுமணம் நடந்தேறி வருவதாலும், இத்தேசத்தில் பூர்வ காலத்தில் அது நடந்தேறி வந்து சிலகாலமாய் ஏதோ