உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

உவமைக்கவிஞர் சுரதா


உஷ்ணமானி - சூடளந்தான்

சூரிய உஷ்ண ஆராய்ச்சிக் கருவியை உஷ்ணமானி என்பர். இதனை உலக வழக்கின்படி சூடளந்தான் என வழங்கலாம்.

நூல் : சூரியன் (1935). பக்கம் : 64
நூலாசிரியர் : ஈ. த. இராஜேசுவரியம்மையார், எம்.ஏ., எல்.டி.,
(சென்னை மேரியரசி கலாசாலை விஞ்ஞான சாத்திர ஆசிரியர்)
Lavatories – குளிப்புரை

வீட்டிலுள்ள சாக்கடைக் குழிகளையும், சாக்கடைகளையும், குளிப்புரைகளையும், கக்கூசுகளையும் ஒவ்வொரு நாளும் காலையில் தவறாமல் தண்ணீர் நிரம்ப வார்த்துக் கழுவ வேண்டும்.

நூல் : விவேக சந்திரிகை மூன்றாம் புத்தகம் (1935) பக்கம் -91
நூலாசிரியர் : தி. அ. சாமிநாத ஐயர் (ஆரியா பத்திரிகை ஆசிரியர்)
பிளேக் - மகமாரி

பூபதி செந்தூரம் - இதை உட்கொண்டால் ஜூரம், ஜன்னி, வாந்திபேதி, வயிற்றுப்போக்கு, மகமாரி (பிளேக்), பித்தம், கிறுகிறுப்பு, சூலை, சூன்மம், கவாசகாசம், சுபம், வாதம், உடல் வலி, பொருமல், அண்ட வாய்வு, சூதக வாய்வு, பக்கவாதம் முதலிய நோய்கள் தீருவதோடு பிள்ளை பெற்ற பெண்களுக்குண்டாகும் எல்லா நோய்களும், குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தங்கள், தோஷங்கள், ஜூரம், ஜன்னி, இருமல் முதலிய சகல நோய்களும் குணமாகும்.

நூல் : சித்தன் (ஓர் மாதாந்தரப் பத்திரிகை) 1935 ஜூன்
மாலை - 1. மணி - 6, பக்கம் - 208
கிடைக்குமிடம் : சாமி, விருதை, சிவஞான யோகிகள்,
சிவஞான சித்த பார்மஸி, கோவிற்பட்டி
மந்திரம் - நிறைமொழி

பண்டைத் தமிழர் திருமண நிகழ்ச்சிகட்கும் இக்காலத் தமிழர் திருமண நிகழ்ச்சிகட்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுகளைக் காணலாம்.