பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

உவமைக்கவிஞர் சுரதா


ஒருவிதத்தில் நின்று போயிருப்பதாகவும், மேற்சொல்லிய துரைத்தன சட்டங்களால் இராஜநீதிக்கும், ஜன சவரட்சணைக்கும், சவுக்கியத்திற்கும், விர்த்திக்கும் ஒத்திருப்பதாகவும் பிரகாசப்படுகின்றது.

நூல் : இந்து கைமை புநர்விவாக தீபிகை (பக்கம் 13)
நூலாசிரியர் : சைதாபுரம் காசி விசுவநாத முதலியார்.
Translation - மொழி பெயர்ப்பு

ஐந்தாம் வேதமென்னப்பட்ட ஸ்ரீ மகாபாரத இதிகாசமானது அநாதியான சம்ஸ்கிருத பாஷையில் ஸ்ரீ வேதவியாசரால் ஆதியில், சயாத லக்ஷமன்கின்ற நூற்றிருபத்தையாயிரங் கிரந்தமாக உலகோர்க்கு இசுபர சுகிர்தப் பிரயோசனகரமாய் நின்று உதவும்படி பிரசாதிக்கப்பட்டது. இதனை, அக்காலத் தொடங்கி இந்த பரதக் கண்டத்தில் வழங்கும் வடதேசத்துப் பாஷைகளிலும் தென்தேசத்துப் பாஷைகளிலும் அவ்வப் பெரியோர் தங்கள் தங்கள் தமிழ் தெலுங்கு முதலிய நடைகளில், தொகுத்தல் வரித்தல் தொகைவிரி மொழி பெயர்ப்பென்கின்ற நூல் யாப்பின் விதிப்படி காவியம் பத்தியம் வசனம் ஆகிய பல ரூபங்களாக ஏற்படுத்தியிருக்கின்றனர். அவற்றுள் வெண்பாப் பாரதமென்பது மதுரைப் பாண்டியராஜன் சங்கத்தார் செய்தது. இது இக்காலத்தில் இறந்த நூலாகி பொருளிலக்கண் நூல்களில் மேற்கோளாக மாத்திரம் காணப்படுகின்றது.

நூல் : மகாபாரதமென்னும் இதிகாசத்தில் முதலாவது ஆதிபர்வம் (1870)
மகாபாரத சரித்திர பாயிரம் : பக்கம் 1
நூலாசிரியர் : தரங்கை மாநகரம் ந.வ. சுப்பராயலு நாயகர்.
தொகை விளம்பி

இது ஒரு யந்திரத்தின் பெயர். இருப்புப்பாதை வண்டிகளில் ஏறிச் செல்லும் பிரயாணிகளின் தொகையைத் தவறாமல் குறிப்பிக்கும். இந்த யந்திரங்கள் சில சென்னை வீதி இரும்புப் பாதை வண்டிகளில் வைக்கும்படி சீமையினின்று வந்து சேர்ந்தனவாம். வனவிலங்கதிசயம் பார்க்கப்போகும் பெயர் இத்தனை பெயரென்று திட்டமாய்க் கண்டு சேர்ந்த கட்டளைக்களுக்கு அறியும்படி ஒரு யந்திரம் உத்தியானத்திலும் வைக்கப்படுமாம்.

இதழ் : ஜனவிநோதினி, ஆகஸ்டு - 1874
சொல்லாக்கம் : இதழாசிரியர்