பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

உவமைக்கவிஞர் சுரதா


ஒலி பெருக்குங் கருவி (Loudspeaker) சொற்பொழிவுகளை அனைவரும் அமைதியாக நெடுந் தூரத்திலிருந்தே கேட்கும்படிச் செய்தது.

இதழ் : சித்தாந்தம் (1937) மலர் 10, இதழ் 7
சொல்லாக்கம் : இதழாசிரியர்
அங்கி - மெய்யுறை

மெய்யுறை - சட்டை. அங்கி யென்னும் வடமொழி வழக்குச் சொல்லினுறுப்புப் பொருளுமிது.

நூல் : கதிரகாமப் பிள்ளைத்தமிழ் (1937) பக்கம் - 90
Block - நிழற்கிழி
நூல் : கதிரகாமப் பிள்ளைத்தமிழ் (1937), பக்கம் : 25
நூலாசிரியர் : சிவங். கருணாலய பாண்டியப் புலவர்
Lorry - பார்த்தமியங்கி
Crane – ஓந்தி
Share speculators – பங்கு எதிர்பார்போர்

முன்னைப் பழம்பொருட் முன்னைப் பழம் பொருளை இப்பழைய முறைகளில் பழுதின்றிப் பணியாற்றியதன்றி அவனே பின்னைப் புதுமைக்குப் பேர்த்துமப் பெற்றியனாகத் திகழ்வதை உணர்ந்தே நூதன் வழிகளைப் பின்பற்றி யிருப்பதும் போற்றத் தகுந்ததே. பாரத்தமியங்கி (Lory) கொண்டு வெகு விரைவில் பாரப் பொருள் பெயர்த்தும், ஓந்தி கொண்டு பாரம் உயர்த்தியும், சாந்தாலை கொண்டு சாந்தரைத்து நற்சாந்துப் பட்டியார் எனவன்றி எளிய சாந்துபட்டியாராகியும் நீண்ட நாட்களில் நடைபெறும் வேலைகளைச் சின்னாளில் வெகு எளிதில் நயம்பட முடித்திருக்கும் நன்மை நயக்கத் தகுந்ததே.

நூல் : திருக்கொள்ளபூதூர்
திருப்பணிச் செல்வர் வாழ்த்து மஞ்சரி (1937), பக். :3
திரட்டியவர் : சாமி. வேலாயுதம்பிள்ளை, பி.ஏ., எல்.டி.,
(கவிஞர் சுரதா அவர்ளின் தலைமை ஆசிரியர்) உரத்த நாடு போர்டு ஹைஸ்கூல் தலைமையாசிரியர்.