உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

143


புஷ்பாவதி - மலர் முகத்தம்மையார் (1938)

பேராசிரியர் மயிலை. சிவமுத்து அவர்களுக்கு முன் பிறந்த குழந்தையின் பெயர் புஷ்பாவதி என்பது. இந்த அம்மையார் இன்று மலர் முகத்தம்மையார் என்று அழைக்கப்படுகிறார். இவர் 1938 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டுத் தமிழ் மொழிக்காகச் சிறை சென்றவர்.

தமிழ்நெறிக் காவலர்
பேராசிரியர் மயிலை சிவமுத்து நினைவு மலர்
மாணவர் மன்ற வெளியீடு, சென்னை.

ஜலஜாட்சி - தாமரைக்கண்ணி (1938)

ஜலஜாட்சி என்பவர் தமிழறிஞர் வல்லை பாலசுப்பிரமணியம் அவர்களின் துணைவியாராவார். ஜலஜாட்சி என்னும் வடமொழிப் பெயரை நீக்கி, தூய தமிழில் தாமரைக் கண்ணி என்று பாற்றியமைத்தவர் பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர்களாவார். திருமதி. தாமரைக் கண்ணி அம்மையார் 1938 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டுத் தமிழ்மொழிக்களாகச் சிறைசென்றவரின் தெரியவராவார்.

உருத்திரம் - பெருஞ்சினம்

பொருள் என்பது யாதோ எனின், அகத்திற்கும் புறத்திற்கும் பொது என்பது. அகத்தைச் சார்ந்துவரும் பொருளெல்லாம் அகப்பொருள் எனப்படும். புறத்தைச் சார்ந்து வரும் பொருளெல்லாம் புறப்பொருள் எனப்படும். இச்சுவை வீரம், அச்சம், இழிவு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம் (பெருஞ்சினம்), நகை, சாந்தம் என ஒன்பதாகும்.

நூல் : அகப்பொருளும் அருளிச்செயலும் (1938), பக்கம் : 5
நூலாசிரியர் : பிரபந்த வித்வான்,
திருப்புறம்பயம் இராமஸ்வாமி நாயடு
காந்தர்வ மணம்- களவொழுக்கம்

உலகின்கண் எல்லாச் சமயத்தாராலும், உலகத்தாராலும் வெறுக்கப்பட்ட களவொழுக்கத்தை எதற்காகக் கற்றல் வேண்டும். இங்குக் கூறும்