144
உவமைக்கவிஞர் சுரதா
களவொழுக்கம் (காந்தர்வமணம்) தீமை செய்யாது வீடு பயப்பது ஒன்றாகும்.
- நூல் : பக்கம் : 19
1930களிலும், 40களின் ஆரம்ப வருடங்களிலும், தேசீய உணர்ச்சியோடு விடுதலை முழக்கம் செய்யும் வேகமான எழுத்துக்களை வெளியிடும் பத்திரிகைகள் பல தோன்றி, நடந்து, மறைந்து கொண்டிருந்தன. லோகசக்தி, பாரதசக்தி, என்ற பத்திரிகைகள் அப்படிப்பட்டவை.
அவற்றில் நான் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்களும் நிறையவே எழுதினேன், பலரது கவனத்தையும் அவை ஈர்த்தன.
அந்தச் சந்தர்ப்பத்தில் தான் எனக்கு ஒரு புனைபெயர் தேவை என உணர்ந்தேன். அதுவரை ரா. சு. கிருஷ்ணஸ்வாமி என்றும், ராசுகி, என்றும்தான் எழுதிக் கொண்டிருந்தேன்.
கவிபாரதியார் தன் நண்பர் குவளையூர் கிருஷ்ணமாச்சாரி என்ற பெயரைக் குவளைக் கண்ணன் என மாற்றியிருந்தது என் மனசில் பதிந்திருந்தது. அதே போல என் சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருஷ்ணஸ்வாமி என்பதைக் கண்ணன் என மாற்றி அதையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்று எனக்கு நானே சூட்டிக் கொண்டேன்.
நூல் | : | வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் |
எடுத்து எழுதியவர் | : | ஏந்தல் இளங்கோ |
இதழ் | : | தாய் - 22. 6. 1986 |
இவ்வெளியீட்டைத் தமது போலெண்ணித் தமது எழுத்தகத்தில் (அச்சுக்கூடம்) பதிப்பிட்டுதவிய தோழர் ந. வி. ராகவன் அர்கட்கும் என் மனமார்ந் அன்பும் நன்றியும் உரியதாகும்.