பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

145


நூல் : இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1939), பக்கம் -5
நூலாசிரியர் : மறை. திருநாவுக்கரசன்
உத்தியோகம் - அரசியல் நிலை

வட மொழிக்குள்ள பெருமை பார்ப்பனர்களுக்காகி அதனால் பார்ப்பனருக்கு உறையுள் (வீடு) அமைத்துக் கொடுப்பதும், அரசியல் நிலை (உத்தியோகம்) கொடுப்பதும், சத்திரம் கட்டி உணவு கொடுப்பதும், அவர்களை உயர்ந்தோராய் மதித்துச் சிறப்பிப்பதும், பண்டும், இன்றும் வழங்குவதுபோல நாளை இந்தி மொழிக்குரிய வட நாட்டார்க்கு அவைகள் கொடுக்கப்படுமல்லவா?

நூல் : இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1939), பக்கம் -43
நூலாசிரியர் : வித்வான் மறை. திருநாவுக்கரசன்
Surgeons - அறுத்தூற்றியாற்றும் மருத்துவர்கள்

எகிப்தியர்களே தொன்மையில் நாகரீகத்தில் நனி சிறந்திருந்தனர். கண்ணாடி கண்டு முதன் முதல் அதனால் கலன் அமைத்தவர்களும் அவர்களே. 2300 ஆண்டுகட்கு முற்பட்டதும் இங்கிலாந்து கண்காட்சிச் சாலையில் இருப்பதுமாகிய துளைகருவி போன்ற உறுதியானது இக்காலத்திலுமில்லையாம். குழந்தைகள் குடிக்கும் இரப்பர் (Rubber)பாற்கருவி அக்காலத்தில் சுடு மணலால் இருந்தது. அறுத்தூற்றி யாற்றும் மருத்துவர்கள் (சர்ஜன்கள்) பல் மருத்துவர் முதலிய பல்வகை மருத்துவர்களும் இருந்தனர். இறந்தோர் வாயெலும்பில் தங்கப் பொய்ப் பற்கள் தங்கியிருந்தன. இறந்தோராயினும் அவர் தம் பல்லைப் பிடுங்குவது எகிப்தியர் இயல்புக்கு ஏற்றதல்லவாம்.

நூல் : குடியரசு (1939 ஆகஸ்டு ௴l32)
கட்டுரையாளர் : தமிழாசிரியர் எ. ஆளவந்தார்
பாங்க் - பணக்கடை

வட நாட்டவர்பால் நமக்குள்ள பெருமதிப்பை எத்தனை எத்தனை வகைகளிலோ காட்டிக் கொண்டு வருகின்றோம். வட நாட்டாரைக் கண்டால் சுயராஜ்யத்தைக் கண்டதுபோல மகிழ்கின்றோம். தங்களிடத்தில் நாம்