பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

உவமைக்கவிஞர் சுரதா


கொண்டிருக்கும் குருட்டு பக்தியைக் கண்ட வட நாட்டார்க் காந்திக்குல்லாயுடன் சென்னையிலும், தமிழ் நாட்டு நகரங்களிலும், வெற்றிலைப் பாக்குக்கடை, மிட்டாய் கடை, பலசரக்குக்கடை, புடவைக்கடை, பணக்கடை (பாங்க்), வட்டிக்கடை, பஞ்சாலை, மரவாலை, முதலிய கடைகளும், ஆலைகளும், நடத்துகின்றனர்.

நூல் : இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1939), பக்கம் : 44
நூலாசிரியர் : வித்வான் மறை. திருநாவுக்கரசு
சர்வாதிகாரம் - தனியாணை

சென்னை மாகாணத் தலைமை அமைச்சர், மாண்புமிக்க இராச கோபாலாச்சாரியார் அவர்கள், வடநாட்டுத் தலைவர் சிலர்க்குத் தாம் ஓர் உறுதிமொழி கொடுத்திருப்பதாகத் தாமே கூறியிருக்கின்றார்.

அவ்வுறுதி மொழியை நிறைவேற்றுதற் பொருட்டுத் தாம் அமைச்சேற்றவுடன் தமிழ்ப் புலவர்களைக் கலந்து கொள்ளாமல், கல்வித் துறையில் வல்லவர்களது கருத்தைக் கேளாமல், தமிழ் மக்களின் வாய்மொழியை வேண்டாமல், சட்ட சபை உறுப்பினர்களோடு சூழாமல், காங்கரசுக் கழகங்களின் கருத்தைக் கேட்காமல் தனியாணை (சர்வாதிகாரம்)யாகக் தமிழ் நாட்டில் இந்தியைக் கட்டாயப் பாடமாகப் புகுத்தினார்கள்.

நூல் : இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? (1939), பக்கம் : 1
நூலாசிரியர் : வித்வான் மறை. திருநாவுக்கரசு
நியாயஸ்தலம் - முறை மன்றம்
ஸ்தலஸ்தாபனம் - நாட்டு நிலையம்
சமரசம் - பொதுமை
வித்தாரகவி - அகலகவி

ஆசுமுதல் நாற்கவியும் என்றது ஆசுகவி, மதுரகவி, அதிரகவி, வித்தாரகவி என்று சொல்லப்பட்ட நான்கு விதமான கவிகளை என்க.

நூல் : கந்தர் கலிவெண்பா (1939)