பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

13


கமா (Kama) - முனை கூட்டு
டேஷ் (Dash) - சிறு கீற்று
பிராக்கெட் (Bracket) - பெருங்கீற்று
முற்றுப் புள்ளி (Pullstop) - குத்து
டபுள் பிராக்கெட் (Double Bracket) - இருதலைப் பிறை

, இம்முனை கூட்டுச் சொல் முதலியவற்றின் பின்னும்,

- இச்சிறுகீற்றுச் சொற்களின் பிரிவுக்குப் பின்னும்,

இப்பெருங்கீற்றுப் பதசாரத்துக்குப் பின்னும்,

( ) இவ்விருதலைப் பிறை வருவிக்கப்பட்ட சொற்களுக்கும், இக்குத்து முற்றுச் சொல்லுக்குப் பின்னும்,

[ ] இவ்விருதலைப் பகரந் தாத்பரியத்துக்கும்,

இத்தாரகை அடியிற் காட்டப்பட்டவற்றிற்கும் வைக்கப்பட்டன.

நூல் : நிஷ்ட்டாநுபூதி மூலமும் உரையும் (1875 ஆகஸ்டு) பக்கம் 2
நூலாசிரியர் : முத்து கிருஷ்ண ப்ரம்மம்.
அந்தக் கரணம் - உட்கருவி

பூமியென்னுங் கற்பக விருக்ஷத்தினது யெளவன மென்னும் நறும் புஷ்ப மஞ்சரி, மங்கையரது அந்தக் கரணங்களாகிய (உட்கருவிகள்) வண்டுகளை ஆகருஷிக்கின்றமை சகஜமே.

நூல் : வில்ஹணீயம் (1875) பக்கம் 10
மொழி பெயர்ப்பாளர் : (யாழ்ப்பாணத்துப் புயோலி) மகாவித்துவான் வ. கணதிப்பிள்ளை


சித்தப்பிரமை - அறிவு மயக்கம்

இது முகமன்று, முயற்களங்கமின்றிய சந்திரனே! இவைகள் ஸ்தனங்களல்ல, பூரண அமிர்த கும்பங்களே! இது அளகபந்தியன்று, காமாயுத சாலையே! இவைகள் நேத்திரங்க ளல்ல, யெளவன புருஷர்களைப் பந்திக்கும் விலங்குகளே! அந்தகார சமூகமும், சந்திர பாகமும், இந்திர வில்லும், இரு