உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

உவமைக்கவிஞர் சுரதா


Jury - மெய்விளம்பி
itinerant Judges — சுற்றிவரும் நீதிபதிகள்

நீதி பரிபாலனத்தில் இரண்டாம் ஹென்றி இரண்டு முக்கியமான திட்டங்களைப் புகுத்தினார். 1. ஜூரி எனப்படும் மெய்விளம்பிகளால் விசாரணை, 2. சுற்றிவரும் நீதிபதிகள். இவை அவரது பாட்டனாரான முதல் ஹென்றியின் இரண்டு சீர்திருத்தங்களை அடிப்படைகளாகக் கொண்டவை.

நூல் : பிரிட்டன் வரலாறு (1066-1485) (1940) பக்கம் - 33
தமிழில் பெயர்ப்பு : ம. சண்முக சுந்தரம், எம்.ஏ.,எல்.டி.,
(சென்னைப் பச்சையப்பன் கலாசாலைத்

தலைமையாசிரியர்)

Cricket துடுப்பு ஆட்டம்
Hockey வளைகழி ஆட்டம்
Rugby பிடி பந்தாட்டம்
Basket Ball கூடைப் பந்தாட்டம்

கேம்ஸ் என்ற பகுதியில் துடுப்பு ஆட்டமும் (Cricket) வளைகழி ஆட்டமும் (Hockey), உதை பந்தாட்டமும் (Foot Ball), பிடி பந்தாட்டமும் (Rugby), சல்லடைப் பந்தாட்டமும் (Tennis), கூடைப் பந்தாட்டமும் (Basket Ball) இவை போல்வன பிறவும் அடங்கும்.

நூல் : மாணவர் தமிழ்க் கட்டுரை (1940), பக்கம் - 16
நூலாசிரியர் : வித்துவான், பாலூர், து. கண்ணப்ப முதலியார்
: (தமிழ் ஆசிரியர் முத்தியாலுப் பேட்டை உயர் கலாசாலை, சென்னை)
Suit case - தோல் பெட்டி

என் தந்தையாரும் யானும் துணிக்கடைக்குச் சென்று, எனக்கு வேண்டிய துணிகளை எடுத்துக் கொண்டோம்; தற்காலப் பேரறிஞர்கள் எழுதிய ஆங்கிலப் புத்தகங்களையும், தமிழ்ப் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டோம்; எனக்கு ஒரு தோல் பெட்டி (SuitCase)இல்லாதது ஒரு குறையாய் இருந்ததால், அதையும் வாங்கிக் கொண்டேன்.