பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

153


Badge - அடையாளப் பதக்கம்

ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு தலைவர் உண்டு. அத்தலைவர், அவ்வப் பிரிவினருக்கு உரிய பாகங்களைக் கற்பிப்பர்; அவற்றில் பரீக்ஷையும் வைப்பர். அதில் தேறுபவர்களுக்கு அப்பிரிவின் அடையாளப் பதக்கம் (Badge) கொடுப்பர்.

நூல் : மாணவர் தமிழ்க் கட்டுரை (1940), பக்கம் - 81
நூலாசிரியர் : வித்துவான் பாலூர் து. கண்ணப்ப முதலியார்
(தமிழ் ஆசிரியர், முத்தியாலுப் பேட்டை உயர் கலாசாலை, சென்னை)


ஒரு மாதப் பத்திரிக்கை - ஒரு மதிமுகத்தாள்
தாய்மொழி தழைக! தாயகம் வாழ்க!!
தமிழணங்கு
ஒரு மதிமுகத்தாள்

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே

மலர் - 1

இதழ் - 9

(1941)

ஆசிரியர் : ஆ.மா. சிவஞானம், தமிழரண், ஆம்பூர்
(பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்)


Fade - மறைந்து தெளிதல்

(Fade) அல்லது மறைந்து தெளிதல் என்ற வழிகதைப் போக்கில் இன்னும் அதிக வித்தியாசத்தைக் குறிப்பதற்கு அனுசரிக்கப்படுகிறது.

சித்திரவாணி
இதழ் : சினிமா உலகம் (16 .11 .1941)
படம் : 7; காட்சி ; 32; பக்கம் , 13