பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

உவமைக்கவிஞர் சுரதா


Direct Cut – நேர் வெட்டு

ஒரு ஷாட்டு மாறி அடுத்த ஷாட்டு வருவதற்கு இங்லிஷில் (Direct Cut) என்கிறார்கள். இதற்கு நேர் வெட்டு முறை என்று சொல்லலாம். இந்த நேர் வெட்டு முறையினால் சினிமாக் கதையில் வேகம் காட்ட முடியும்.

சித்ரவாணி
இதழ் : சினிமா உலகம் (16.11. 1941)
படம் 7; காட்சி 32 பக்கம் 12
Railway Station - நீராவிப் பொறித்தொடர் நிலையம்

திருநாங்கூர் - இவ்வூர் தஞ்சாவூர் ஜில்லா சீகாழித் தாலுகாவில் உள்ளது. தென்னிந்திய இருப்புப் பாதையில் சீகாழி என்கிற நீராவிப் பொறித் தொடர் நிலையத்தில் இறங்கிச் சாலை மார்க்கமாய்த் தென்கிழக்கே ஏழெட்டுக் கற்கள் சென்றால் இத்தலத்தை அடையலாம். வைத்தீசுவரன் கோவில் எனும் நிலையத்தில் இறங்கிக் கிழக்கே ஐந்தாறு கற்கள் சென்றாலும், இதனை அடையலாகும். இவ்வூர் நாங்கை எனவும் மருவி வழங்கும்.

இதழ் : செந்தமிழ் (1941), தொகுதி - 38, பகுதி - 3
கட்டுரையாளர் : ச. ஸ்ரீநிவாஸயங்கார்
பிருகதீசுரர் - பெருவுடையார்

பராந்தகனது கொட்பேரனான இராஜகேசரி முதலாம் இராஜராஜன் என்பவன், சிறு விளக்கில் ஏற்றிய பெரும் பந்தம் போல விளங்கினான். இவனே, பாண்டிய சேர ஈழ நாடுகளை வென்று அவற்றைச் சோழ நாட்டின் பிரிவுகளாக்கிச் சோழ சாம்ராஜ்யத்தை அமைத்தவன் இவன் சிவபக்தி மிக்கவன் திருவாபரணம் முதலியவைகளைப் பெருவாரியாகக் கோயில்களுக்கு வழங்கினவன். தஞ்சை மாநகர் இவன் காலத்தில் அரசர் இருப்பாகப் பொலிவு பெற்று விளங்கியது. அந்நகரில் இவன் எடுப்பித்த இராஜராஜேசுவரம் என்னும் பிருகதீசுரர் (பெருவுடையார்) கோயிலொன்றே இவன் பெருமையை இன்றுவரை உலகில் விளக்கியுள்ளது.

நூல் : மூன்றாம் குலோத்துங்க சோழன்(1941), பக்கம் : 14