பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

உவமைக்கவிஞர் சுரதா


Assignment Card – குறிப்புத்தாள் அட்டை
Assignment Chart – குறிப்பு விளக்க அட்டை

பாடசாலை வேலை யாவற்றையும் தனிப்பயிற்சி மூலம் நடத்த முடியாது. போனாலும், வேலையின் பெரும் பாகத்தை இம்முறையின் மூலம் நடத்தலாம். தனிப்பயிற்சி வேலையின் திறமையான பகுதி குறிப்புத் தாள்களை உபயோகிப்பதேயாகும். ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு குறிப்புத்தாள் அட்டையும் (Assignment card) ஆசிரியரிடம் ஒரு குறிப்பு விளக்க அட்டையும் (Assignment Chart) இருக்க வேண்டும்.

நூல் : தாய்மொழி போதிக்கும் முறை (1942), பக்கம் - 23
நூலாசிரியர் : வி. கே. சேஷாத்திரி, பி.ஏ., எல்.டி.,
(சென்னை கல்வி இலாகா)
Individual Method தனிப்பயிற்சி முறை
Assignment குறிப்புத்தாள்
Oral வாய்மொழி
List of words சொற்பட்டியல்
Vocabulary சொல்லகராதி
Flash - Card மின்னட்டை
Punctuation Marks மாத்திரைப் புள்ளிகள்
Creative Expression ஆக்கச் சொல்வன்மை
நூல் : தாய்மொழி போதிக்கும் முறை (1942)
அரும்பத அகராதி, பக்கங்கள் - 2, 3
நூலாசிரியர் : வி. கே. சேஷாத்திரி, பி.ஏ., எல்.டி.,
(சென்னை கல்வி இலாகா)
Circus - அலைக்களம்

வியாசம் - வாய்மொழி வியாசத்துக்கும் பிறகு எழுதும் வியாசம் சுயமான சொல் வன்மையின் அவசியம் - சம்பாஷணை, சம்வாதம், மாணவர்களால் பொறுக்கி எடுக்கப்பட்ட பழக்கமான விஷயங்களில் பிரசங்கங்கள் - (2-ம்) ஒரு மழை நாள் அனுபவம், பொருட் காட்சிச் சாலையைப் பார்வையிடுதல், அலைக்களம்.