பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

உவமைக்கவிஞர் சுரதா


ஒலிபரப்பி (Radio)யும், நல்ல புத்தகங்களடங்கிய வாசக சாலையும் வைத்திருக்கிறார்கள்.

மேற்படி நூல் : திருக்குற்றாலத் தலவரலாறு (1943), பக்கம் - 17
Department of Epigraphy - கல்வெட்டுப் பதிவு நிலையத்தினர்

இத்தலத்தைப் பற்றிய கல்வெட்டுகள் ஏராளமாக உள்ளன. இவற்றைத் தென்னிந்தியக் கல்வெட்டுப் பதிவு நிலையத்தினர் (Department of Epigraphy) எடுத்து எழுதியிருக்கின்றனர். அவை 1895ஆம் வருஷத்து 203, 204 எண்களுள்ள கல்வெட்டுகளாக எழுதப்பட்டு தென்னிந்திய சிலா சாஸனங்கள் பகுதி 5ல் 767, 768ம் எண்களாக வெளிவந்துள்ளன.

மேற்படி நூல் : திருக்குற்றாலத் தலவரலாறு (1943), பக்கங்கள் : 42, 43,
(திருக்குற்றால நாதசுவாமி கோயில் தர்மகர்த்தா)
Executive Officer – ஆணையாளர்

தற்காலம் செங்கோட்டை மிட்டாதார், திரு. எம். சுப்பிரமணியக் கரையாளர் ஆட்சித் தர்ம கர்த்தராயும், தென்காசி, வக்கீல், திரு. டி.எஸ் சங்கரநாராயண பிள்ளை பி.ஏ., பி.எல், அட்வகேட் திரு. ஏ.சி. ஷண்முக நயினார் பிள்ளை பி.ஏ., பி.எல், தர்ம கர்த்தர்களாயும் நியமிக்கப்பட்டு நிர்வாகம் நடத்தி வருகின்றனர். மாதச் சம்பளம் ரூபாய் 200 வரை பெறும் ஒரு ஆணையாளரையும் (Executive Officer) நியமிக்கின்றனர். இப்போதுள்ள ஆணையாளர் திருவாளர் கே.வி. சுப்பையாப் பிள்ளையவர்கள் B.A.,

நூல் : திருக்குற்றாலத் தலவரலாறு (1943), பக்கம் - 60
நாராயணசாமி - திருமால் அடிகள் (1943)

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நானும் நெடுஞ்செழியனும் ஒன்றாகப் படித்தோம். அந்தக் காலத்தில் நெடுஞ்செழியனுக்குப் பேசும்போது நாக்கு புரளக் கஷ்டப்படும்.