உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

உவமைக்கவிஞர் சுரதா



ரெங்கசாமி- அரங்கண்ணல் (1943)

25 ஆண்டுகளுக்கு முன்பு! ‘கிளம்பிற்றுக் காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்! கிழித்தெறியத் தேடுதுகாண்பகைக் கூட்டத்தை’ என்று பாரதிதாசனார் பாராட்டிய திருவாரூரில், ஒரு தமிழ்க் குகை, மா. வெண்கோ எனும் புனைபெயருக்குள் தன்னை மறைத்துக் கொண்ட வயலூர் சண்முகம், திருக்குவளை கருணாநிதி, கோமல் ரங்கசாமி, திருவாரூர் சாமா, விஜயபுரம் செல்லக் கணபதி, குளக்கரை சீனுவாசன்... அடிக்கடி இந்த மாணவப் பட்டாளம் அந்தக் ‘குகை’க்குள் கூடும். திருக்குவளை கருணாநிதி வேலையிருந்தால்தான் வருவார். அவர் தவிர மற்ற நாங்கள் எல்லாம் ஒரு கூட்டம். தமிழ் மீது எங்களுக்கு ஓர் ஆசை.

எனது மாணவ ஆசான் வ. கோ. சண்முகம் ஓர் அவைக் கோழை! மிராசு வீட்டுப் பிள்ளை எனும் நினைப்பும் வசதியான வாழ்வும் அவருக்கு அப்போது அமையாதிருந்தால் இன்று அவர் கவிஞர்களில் கவிஞராகவோ அல்லது இன்னொரு கருணாநிதியாகவோ இருந்திருக்கலாம். சிறந்த தமிழ்த் தும்பீ! அவருடைய வீடுதான் எங்கள் குகை. கோமல் ரங்கசாமியான என்னை அரங்கண்ணல் ஆக்கியது அவர்தான்.

ராம. அரங்கண்ணல், எம்.எல்.ஏ. சுரதா பொங்கல் மலர் - 1970
Bus - நெய்யாவி ஊர்தி

நெய்யாவி ஊர்தியிலே (பொருள் தெரியாவிட்டால் நீலை பாஷையிலுள்ள பஸ் என்ற திசைச் சொல்லை உபயோகித்துக் கொள்ளவும்) பிரயாணம் செய்து கொண்டிருந்த, ஒரு சகோதரி வேடிக்கையாக ஒன்றைச் சொல்ல, அதைக் கேட்ட மற்றப் பிரயாணிகள் கொல் என்று சிரித்தார்கள்.

நூல் : அசோகவனம் (1944), பக்கம் -92
நூலாசிரியர் : எ. முத்துசிவன்
Bangalow - தங்கிடம்

பொருநையாறு இம்மலைமிசைத் தோன்றிக் கீழ் நோக்கி ஓடி வருகிறது. இது தோன்றும் இடம் சதுப்பு நிலமாக எப்போதும் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கிறது. இது சிறிது தூரம் வந்தவுடன் கன்னிகட்டி என்ற ஓரிடம் இருக்கிறது.