பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

161


அவ்விடம் மரச் செறிவுள்ளதாய்ப் பேரழகினதாய் விளங்குகின்றது. இங்கே தங்கிடம் ஒன்றிருக்கிறது.

நூல் : பாவநாசம் பாவநாச சரி கோவில் வரலாறு (1944), பக். 5
நூலாசிரியர் : இ. மு. சுப்பிரமணியபிள்ளை, தலைமைத் தமிழாசிரியர்,
நாட்டாண்மை உயர்ப்பள்ளிக்கூடம், சங்கரன் கோவில்.
Profiles - பக்கப் பார்வைப் படங்கள்

இந்த நாகரிகமற்ற காட்டு மனிதர்களுக்குப் படம் வரையத் தெரிந்திருந்தது. ஆனால் காகிதத்தாள்களாவது எழுதுகோலாவது மைதீட்டும் கருவியாவது அக்காலத்தில் இருக்கவில்லை. கல் ஊசிகளும் கூர்மையான கருவிகளுமே அவர்களிடம் இருந்தன. இவற்றைக் கொண்டு குகைகளின் சுவர்களில் அவர்கள் மிருகங்களின் உருவங்களைக் கீறி வரைந்தார்கள். அவர்கள் எழுதியுள்ள சித்திரங்களில் சில மிகவும் நன்றாயிருக்கின்றன. ஆனால் அவைகளெல்லாம் பக்கப் பார்வைப் படங்கள் (Profiles). பக்கப் பார்வைப் படங்களை வரைவது எளிது என்று உனக்குத் தெரியும்.

நூல் : ஜவாஹர்லால் நேருவின் கடிதங்கள் (1944)
பக்கங்கள் -43, 44
மொழிபெயர்ப்பு : சி. ரா. வேங்கடராமன், பி.ஏ. பி.எல்,
(இந்திய ஊழியர் சங்கம்)
வாக்கியம் - சொற்றொடர்

இராமன் பாடம் படிக்கிறான்
சீதை கோலம் போடுகிறாள்
பசு பால் தரும்
நாய் வீட்டைக் காக்கும்.

இவ்வாறு பல சொற்கள் தொடராகச் சேர்ந்த சொற்றொடரால் (வாக்கியத்தால்) ஒரு கருத்தினைப் பிறருக்கு அறிவிக்கின்றோம்.

நூல் : சிறுவர் தமிழிலக்கணம் (1945)

பக்கம் - 5

நூலாசிரியர் : வே. வேங்கடராஜுலு ரெட்டியார்