பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

உவமைக்கவிஞர் சுரதா


கிளாரினெட் - கிளரியம்

இது ஐரோப்பியத் துளைக்கருவிகள் ஒன்று. இப்போது இது தஞ்சாவூர்க் கூட்டியத்தில் (பாண்டில்) இடம் பெற்றுள்ளது. இதைச் சதிர்க் கச்சேரிகளில் வாசிக்கப்படும் சின்ன மேளத்தில், குழலுக்கும் முக வீணைக்கும் பதிலாக முதன்முதலாக நுழைத்தவர் மகாதேவ நட்டுவனார் ஆவார்.

நூல் : தமிழர் இசைக் கருவிகள் (1945), பக்கம் - 50
நூலாசிரியர் : பி. கோதண்டராமன்
சாயாசரீரம் - நிழலுடல்
நூல் : பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி (1945) பக்கம் . 8
குறிப்புரை : வி. சிதம்பர ராமலிங்க பிள்ளை
(திருவாவடுதுறை ஆதீன வித்துவான்)
Band - கூட்டியம்

ஐரோப்பிய இசையின் தொடர்பினால் தமிழ்நாட்டு இசையில் ஏற்பட்ட நவீனங்களில் பாண்டு (கூட்டியம்) என்பதும் ஒன்று. சென்ற நூற்றாண்டில், தஞ்சாவூர் சமஸ்தானத்தில், மரத்தாலும், பித்தளையாலும் ஆன இசைக் கருவிகளைக் கொண்டு ஒழுங்காக அமைக்கப்பட்ட முதல் பாண்டு, கருநாடக இசை முறையில் வாசிக்கப்பெற்றது.

நூல் : தமிழர் இசைக் கருவிகள் (1945), பக்கம் - 62
நூலாசிரியர் : பி. கோதண்டராமன்
Universe - உலகத் தொகுதி

தருக்கையுடைய மனத்தவர்களே ! நீங்கள் போய் விடுங்கள்; மெய்யடியார்களே! விரைவாக வாருங்கள் அடியார் கூட்டத்தில் சேர்ந்து, இறைவன் சம்பந்தமான பிறருடைய அநுபவங்களைக் கேட்டும் தம்முடைய அநுபவங்களைப் பிறருக்குச் சொல்லியும் பரம்பரையாக ஈசனுக்கு அடிமைப் பணி செய்யுங்கள். உலகத் தொகுதியையும் கடந்த அப்பாற்பட்ட பொருள், அளவுகடந்த ஆனந்த