தமிழ்ச் சொல்லாக்கம்
163
வெள்ளமாயிருக்கும் அல்லது ஆனந்த வெள்ளத்தைத் தரும் பொருள், முன்னும், இப்போதும், எக்காலத்தும் (அழியாது) உள்ள பொருளென்றே சிவபெருமானுக்குப் பல்லாண்டு கூறுகின்றோம்.
நூல் | : | சைவ சமய விளக்கம் (1946), பக்கம் - 51 |
நூலாசிரியர் | : | அ. சோமசுந்தர செட்டியார் |
(சேக்கிழார் திருப்பணிக் கழகத் தலைவர்) |
வாய் திறந்து பகவானைப் பேரிட்டழையாமல் மனத்தால் தியானிப்பவர்களும் அவரைக் (பகவானை) குதா என்னும் நாமத்தால் ஒசைபடாமல் சொல்லி, ஏதாவதொரு வடிவத்தாலேயே தியானிப்பார்கள். அவரை ஏதேனுமொரு பாவனையினாலன்றி தியானித்தல் எளிதன்று. அவரை ஆகாயமாகவாவது தியானித்தே தீர வேண்டும். ஆகாயமும் ஒரு பொருளே அன்றி வெறும் பாழ் அல்ல. முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாம், அப்பாலும் பாழென்றறி என்றபடி பகவானைப் பாழ் என்றாலும் அவர்க்கு நாமம் ஏற்படுகிறது. எப்போது நாமம் ஏற்படுகிறதோ, அப்போது ரூபமும் ஏற்படாமல் இராது.
நூல் | : | கபீர்தாஸ் (1945), பக்கம் : 9, 10 |
நூலாசிரியர் | : | பண்டிதர் ம. மாணிக்க வாசகம் பிள்ளை |
'லினேரியோ' என்பது ஒரு ஆங்கிலச் சொல். தமிழில் அதன் பிரதி பதம் 'காட்சிக் கோப்பு'.
இப்பதம் சினிமாவுக்கும் சரி, டிராமாவுக்கும் சரி - பொதுவானது.
இதழ் | : | குண்டுசி, நவம்பர் 1947, பக்கம் :12, பட்டை - 1, ஊசி - 2 |
கட்டுரையாளர் | : | பாலபாரதி ச. து. சு. யோகியார் |
பேடின் | - | வளர்பிறை |
லாங் அல்லது ஸ்லோ பேடின் | - | நீள் வளர் பிறை |
பேடவுட் | - | தேய்பிறை |