பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

165


சம்சார நெளகா - வாழ்க்கைப் படகு

ப்ரகதி பிக்சர்ஸ் & ஸ்டார் கம்பைன்ஸ் தயாரித்த சம்சார நெளகா அல்லது வாழ்க்கைப் படகு (தமிழ்)

புத்தகம் : சம்சார நெளகா அல்லது வாழ்க்கைப் படகு
பாட்டுப்புத்தகம் (1948), பக்கம் 1
நூலாசிரியர் : நடிகர் பி. ஆர். பந்துலு
சுந்தரேசன் - எழிலன் (1948)

சுந்தரேச துரை என்ற இயற்பெயர் கொண்ட வானம்பாடி எழிலன் வானம்பாடி என்னும் புனை பெயர்களில் எழுதினார். வானம்பாடி என்னும் பெயரில் 1948ல் வார இதழ் நடத்தினார். பின்னர் 1973ல் கவிதா மண்டலம் என்னும் கவிதை ஏட்டைத் தொடங்கி 3 ஆண்டுகள் நடத்தினார்.

இதழ் : இளந்தமிழன் ஜனவரி மார்ச் 1989), பக்கம் 10
சிறப்பாசிரியர் : தி. வ. மெய்கண்டார்.
சுவாமி அருணகிரிநாதர் - செம்மலை அண்ணலாரடிகள்
நூல் : மக்களின் கடமை (1948), பக்கம் - 1
ஆக்கியோன் : சுவாமி அருணகிரிநாதர் என வழங்கும் செம்மலை அண்ணலாரடிகள்
ராஜரத்தினம் - அரசுமணி

திருவல்லிக்கேணியில் உள்ள கெல்லெட் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் புலவர் அரசுமணியின் இயற்பெயர் ராஜரத்தினம் என்பதாகும். அப்பெயரை அரசுமணி என்று 1948ஆம் ஆண்டில் இவர் மாற்றி வைத்துக் கொண்டார்.