பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

உவமைக்கவிஞர் சுரதா


Power House – மின் மனை

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மைசூர் நாட்டு சர்க்கார் தங்கள் நாட்டில் உள்ள ஜீவநதிகளின் இயற்கையான நீர் வீழ்ச்சிகளின் உதவியால் மின்சார சக்தியைத் தயாரிக்க முன் வந்தனர். சிவசமுத்திரம் என்ற இடத்தில் உள்ள காவிரியின் நீர் வீழ்ச்சியண்டை 1902ல் மின்மனை (Power House) ஒன்றை நிறுவி மின்சாரத்தை தோற்றி, அங்கிருந்து 92.மைல் தூரத்தில் உள்ள கோலார் தங்க வயல்களுக்குக் கொண்டு போய், விளக்கெரிக்கவும், யந்திரங்களை இயக்கவும் உபயோகித்தனர். இச் சக்தியைக் கொண்டு நடத்த பல தொழிற்சாலைகளையும் ஏற்படுத்தி, இந்தியாவுக்கு, ஏன் ஆசியாவுக்கே வழி காடடினாகள்.

நூல் : திராவிட நாடு (முதல் பாகம்) (1949),
அமைப்பியல், பக்கம் - 72
நூலாசிரியர் : அ. கு. பாலசுந்தரனார், பி.ஏ., எல்.டி.
(ஆசிரியர், சிந்தாதிரிப்பேட்டை
உயர்நிலைப் பள்ளி, சென்னை)
பிரிவு உபசாரப் பத்திரிகை - பிரிவு விடை இதழ் (1545)

சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியரும், தமிழ்த் துறைத் தலைவருமாயிருந்த பேராசிரியர் மொ. அ. துரையரங்கனார் அவர்கள் பி.ஓ.எல், எம்.ஓ.எல். -

மதுரைத் தியாகராய கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகச் சென்றபோது பாராட்டி அளித்த சென்றபோது பிரிவு விடை இதழ்.

பச்சையப்பன் கல்லூரித் தமிழ் மாணவர்கள்
சேத்துப்பட்டு
18 10.1949 இதழ் : இதழ் இணக்கம் (1949), மலர் : 3, இதழ் 9
ஆசிரியர் : வித்வான் மொ. அ. துரை. அரங்கசாமி, பி.ஓ.எல்,
Projector - ஒளியுருவ இயந்திரம்

ராபர்ட் பால் என்ற அறிஞன் முதன் முறையாக கினிடோஸ் கோப்பையும் படவிளக்கையும் இணைத்து ஒளியுருவத்தைத் திரையில் விழச்-