பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

167


செய்தான். அதைத்தான் எல்லோரும் வேடிக்கைப் பார்த்தனர். அநேகமாக பால், பேசாத சினிமாவைக் கண்டுபிடித்து விட்டான் என்றே கூற வேண்டும். இதே சமயத்தில் பிரான்சு நாட்டில் லூமிரி சகோதரர்களும் அமெரிக்காவில் லாதம் (Latham) என்பவனும் ஒளியுருவ இயந்திரம் கண்டுபிடித்தனர்.

நூல் : களஞ்சியம் (1949), பக்கம் , 54
நூலாசிரியர் : இரா. நெடுஞ்செழியன் எம்.ஏ.,
மெளன முத்திரை - சொல்லாக் குறி
ஆனந்தம் - சிவப்பேற்றின்பம்
நூல் : கவிஞன் உள்ளம் (1949)
நூலாசிரியர் : வித்துவான் ந. சுப்பு ரெட்டியார், பி.ஏ. பி.எஸ்ஸி.
எல்.டி., தலைமையாசிரியர் ஜமீந்தார்
உயர்நிலைப் பள்ளி, துறையூர்.
சுந்தரராசு - அழகரசன்
அறிவிப்பு

இந்நூலை என் அம்மானாரிடமிருந்து யான் விலைக்கு வாங்கிக் கொண்டமையால், இதன் பதிப்புரிமை எனதாகும்.

சேலம்,

சுந்தரராசு என்னும்

29, 12. 1949

அழகரசன்

நூல் : சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (1949)
நூலாசிரியர் : பண்டித புலவ ஞா. தேவநேயனார், பி.ஓ. எல் (சேலம்
நகராண்மைக் கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவர்)
சுந்தரேசன் - எழிலரசன் - எழிலன்

கவிஞர் வானம்பாடி என்று தமிழர்களால் அழைக்கப்பட், கலைமாமணி, கவிஞர் திலகம், கவிஸ்ரீ கவிஞர் வானம்பாடி துரை சுந்தரேசன் அவர்கள் 1948ல் வானம்பாடி என்னும் வார இதழினைத் தொடங்கி சில காலம் நடத்தினார்.