பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

15


சிரேஷ்டன் தலைவன் (பக்.11)
உபசாரபூர்வகம் முன் மரியாதையாக (பக்.13)
சோடசம் பதினாறு
வியாகுலம் துக்கம்
சுவர்ணச்சலாகை பொன் ஈட்டி
அளகபந்தி மயிர் முடிச்சு
பாலாதித்தியன் இளஞ்சூரியன்
தனசம்பத்து பணச்செல்வம் (பக்.22)
சூடகம் வளையல் (பக்.23)
பிரலாபம் புலம்பல் (பக்.25)
சம்பாவனை மரியாதை (பக்.29)
High Court – உயர்நீதி சாலை

இராமசாமி ராஜூ இளம்பிராயத்திலேயே மிகவும் நுட்ப உணர்வும் ஆழ்ந்த அறிவும் உடையராயிருந்தனர்.

'யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு’

என்ற ஆன்றோர் திருவாக்கைக் கடைப்பிடித்து பாரிஸ்டர் பரீட்சைக்குப் படிக்க விரும்பி 1882 ஆம் வருஷம் லண்டன் மாநகருக்குச் சென்றார். அங்குத் தங்கிய காலத்தில், ஆக்ஸ்பர்ட் யூனிவர்சிட்டியிலும், லண்டன் யூனிவர்சிட்டி காலேஜிலும், தமிழ், தெலுங்கு இவை இரண்டிற்கும் போதகாசிரியராக விருந்தது மன்றிப் பத்திரிகைகளுக்கு விஷயதானஞ் செய்து அதனால் பெறும் பொருளால் தம்மையும் தம் குடும்பத்தையும் போற்றி வந்தார். அக்காலத்தில்தான், ஆங்கில பாஷையில் 'அறுபது மந்திரிகள் கதை' என்னும் ஒரு நூல் எழுதி வெளியிட்டார். தாம் குறித்து சென்ற பாரிஸ்டர் பரீட்சையில் தேறியபின் 1885 ஆம் வருஷம் இங்கிலாந்தை விட்டுப் புறப்பட்டுச் சென்னை வந்து சேர்ந்தார்.

அதே வருஷம் ஜூலை மாதத்தில் சென்னை உயர் நீதி சாலையில் (High Court) அவர் ஒரு பாரிஸ்டராக ஏற்றுக் கொள்ளப்பெற்றார்.

நூல் : பிரதாபசந்திர விலாசம் (1877) (1915) (பக்கம்-2)
நூலாசிரியர் : பஉ. இராமசாமிராஜூ, பி.ஏ. பாரிஸ்டர் - அட் - லா எப்.ஆர்.எச்.எஸ். (லண்டன்) எம்.ஆர்.ஏ.எஸ். (லண்டன்)
பதிப்பாளர் : வி. ராமசாமி சாஸ்திரிலு