உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

169


ஞானேந்திரியம் - புறமறி கருவி

மிருகாதிகளின் அகவுணர்வு பிறந்ததிலிருந்து பெரும்பாலும் ஒரளவுள்ளதாகவே காணப்படுகிறது. விருத்தியடைவதில்லை. அது புறமறி கருவியான (ஞானேந்திரியமான) கண், காது, மூக்கு, நாக்குப் போன்றதாயிருக்கிறது. பத்து வயதில் இரண்டு கஜ தூரத்தில் தெரிந்த தினை, 15 வயதில் 4 கஜ தூரத்திலும், 20 வயதில் 20 கஜ தூரத்தில் கண்ணுக்கு நன்றாய் தெரியும் என்பது இல்லை. 10 வயதில் எப்படி எவ்வளவு தூரத்தில் தெரியுமோ 30, 40 வயதிலேயும் அப்படி அவ்வளவு தூரத்திற்றான் தெரியும். இந்த ஞானேந்திரியங்களின் அறிவு மனித உடம்பிலானாலும் சரி அவ்வாறு அளந்து போட்டதேயாகும்.

நூல் : பக்கம் 30
Gide - சுட்டிக்காட்டி

தனுஷ்கோடிக்கு சேது என்றும் பெயர் வழங்குகிறது. வங்காள விரிகுடாவும் இந்து மகாசமுத்திரமும் கலக்கும் இம்முனையில் குளித்தால் நல்ல கதி கிடைக்கும் என்று ராமேச்சுரத்துக்கு வரும் இந்துக்கள் பலர் இங்கு வந்து முழுகிவிட்டுப் போகிறார்கள். இவ்விடத்திலிருந்து தினந்தோறும் நீராவிக் கப்பல்கள் பிரயாணிகளையும், சாமான்களையும் ஏற்றிக் கொண்டு லங்கைக்குச் செல்கின்றன. இத்தீவில் வசிப்பவர்கள் படகோட்டுதல், மீன் பிடித்தல் முதலிய தொழில்களைச் செய்து பிழைக்கிறார்கள். ரமேச்சுரத்திலும், தனுஷ்கோடியிலும் அப்புண்ணிய க்ஷேத்திரங்களில் உள்ள பழைய சின்னங்களை சுட்டிக்காட்டி நற்கதிக்கு வழிகாட்டும் பார்ப்பனரும் பலர் வசிக்கிறார்கள்.

நூல் : திராவிட நாடு (முதல் பாகம்) (1949)
அமைப்பு இயல், பக்கம் - 7
நூலாசிரியர் : அ. கு. பாலசுந்தரனார், பி.ஏ., எல்.டி.
(ஆசிரியர், சிந்தாதிரிப்பேட்டை

உயர்நிலைப் பள்ளி, சென்னை)

Art - கைவன்மை

கைத்திறன் என்பது மனிதன் உள்ளத்தில் உள்ள ஆன்ம வுணர்ச்சியையும் இறைவனையும் ஒன்றுபடுத்துவதாகும். இதன் பெருஞ் சிறப்பை உளங்கொண்ட நம் முன்னோர் அழகினை ஆதரித்தனர். அழகிய சோலைகளை