இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
170
உவமைக்கவிஞர் சுரதா
அமைத்தனர். அழகொழுகு கட்டடங்களைக் கட்டினர், இயற்கை அழகு வாய்க்கப் பெற்ற இடங்களில் செயற்கை அழகையும் சிறப்புறச் செய்தனர். இயற்கையும் செயற்கையும் கூடிய வழி இன்ப வெள்ளம் பெருக்கெடுத்தோடுகின்றது போலப் பேரழகு பெரும் பொலிவுடன் விளங்கும் அன்றோ? இங்ங்ணம் நம் முன்னோர் பேரழகில் பிறந்தனர். பேரெழிலில் வளர்ந்தனர்; அவ்வழகிலேயே இரண்டறக் கலந்தனர். அவ்வழகினை அகமகிழக் காட்ட வல்லது கைவன்மை ஒன்றேயாகும்.
நூல் | : | அறிவியல் கட்டுரைகள் (1949), பக்கம் : 11 |
நூலாசிரியர் | : | பேராசிரியர் பி. இராமநாதன் எம். ஏ. |
நூல் | : | கட்டுரை விளக்கம் (1949) |
நூலாசிரியர் | : | வித்துவான் ஆர். கன்னியப்ப நாயகர் |
தமிழாசிரியர் ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம் |
1950இல் தமிழரசன், தசாவதானி கணக்காயர் மீ. உ. கான்முகமது புலவர் அவர்கள், சென்ராயல் என்ற பெயரை தமிழன்பன் என மாற்றம் செய்தார்.
சாவி | : | சுழட்டவும் இல்லை கழட்டவுமில்லை |
சோறு சமைக்க ஜலம் எங்கே? | ||
விதூ | : | சொல்றதைக் கேளடி தோண்டியைத் தூக்கினேன் |
டுடுப்புன்னு ரெண்டா போச்சிடி |
புத்தகம் | : | ராஜா - விக்கிரமா, திரைப்பாடல் புத்தகம் (1950) பக்கம் : 6 |
சொல்லாக்கம் | : | திரைப்பாடலாசிரியர் சிதம்பரம் ஏ. எம். நடராஜ கவி |