பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172

உவமைக்கவிஞர் சுரதா


பஞ்சபாணம் - ஐந்தம்பு
த்வஜம் - கொடி
சமரகேசரி - போர்ச்சிங்கம்

நாளியல் விளக்கம் என்னும் நந்தன வருஷத்துச் சுத்த வாக்கிய பஞ்சாங்கம் (1951)

ஆசிரியர் : வித்வான் : சோ. அருணாசல தேசிகர் (சீர்காழி)
Lipstick - உதட்டுச்சாயம்

உதட்டுச்சாயம் அழிந்து போய் விடுமே என்று காதலனை முத்தமிடத் தயங்குகிறவளைப் பற்றியும், ஜரிகை வேஷ்டி அழுக்காய் போய் விடுமே என்று தெருவில் சுவாமி புறப்பாடானபோது சாஷ்டாங்க வணக்கம் செய்யப் பால் மாறுகிறானே பக்தன்! அவனைப் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறீர்களல்லவா? அந்த வரிசையில் இந்த ஆசாமியையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நூல் : குட்டிக் கட்டுரைகள் (1951), பக்கம் :34, 35
நூலாசிரியர் : வித்வான் ந. சுப்ரமணியன் எம். ஏ.
பஞ்சாங்கம் - நாளியல் விளக்கம்

நாளியில் விளக்கம் என்னும் நந்தன வருஷத்துச் சுத்த வாக்கிய பஞ்சாங்கம். இது (சீர்காழி, வித்வான் சோ. அருணாசல தேசிகரால் கணிக்கப்பட்டது.

நாளியல் விளக்கம் என்னும் நந்தன வருஷத்துச் சுத்த வாக்கிய பஞ்சாங்கம் (1951)

ஆசிரியர் : சோ. அருணாசல தேசிகர்
( கவிஞர் சுரதா அவர்களின் யாப்பிலக்கண ஆசிரியர் )
அபிலாஷை - விழைவு
வியாக்கிரபாதர் - புலிக்கான் முனிவர்
பீதாம்பரம் - பொன்னுடை
அஷ்டாக்ஷர் - எட்டெழுத்து
இரணியன் - பொன்னன்
ரதவீதி - தேர்மறுகு