பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

175


Refrigerator - குளிரச் செய்யும் பொறி
Microscope – அணு நோக்கி

விஞ்ஞானிகளுக்குத் தேவைப்படும் அணு நோக்கி பரிசோதனைப் பொறி (Testing Machine) மின்சாரச் சூளை அடுப்பு. ஆய்வுத் துலை (Analytical Balance) எக்ஸ்ரே பொறி, அல்ட்ரா வயலெட் (ஊதா) ஒளிக் கதிர்கள் வீசும் பொறி, வெப்ப ஒளிக்கதிர் வீசும் பொறி (Heat - Ray), கண்ணாடி உருக்கும் பொறி, குளிரச் செய்யும் பொறி (Reigerator),மற்றைய வீட்டியல் சிறு பொருள்கள், தண்ணீரை வெந்நீராக்கும் மின்சாரக் கருவி, மின்சார வீட்டடுப்பு, பல்புகள், பாதரச பல்புகள் முதலிய எல்லாப் பொருள்களும் ஜப்பானில் உற்பத்தியாகின்றன.

நூல் : நான் கண்ட ஜப்பான் (1953), இரண்டாம் பதிப்பு
பக்கம் : 65, 66
நூலாசிரியர் : க. இராமசுவாமி நாயுடு, முன்னாள் மேயர், சென்னை.


இரணியப் பிண்டம் - பொற்கட்டி

இந்தியாவில் ரிக்வேத காலத்திலேயே (சுமார் கி.மு. 2000) பொற்கட்டி, பணாக உபயோகிக்கப்பட்டதாக அறிகிறோம் அது. இரணியப் பிண்டம் என்றழைக்கப்பட்டது. தமிழில் அதன் நேர் பொருள் பொற்கட்டி கந்த புராண ஆசிரியர் கச்சியப்ப சிவாசாரியார் இரணியனைப் பொன்னன் என்றே கூறுவர். ஆடகப் பெயரின் அவுணர் மார்பினன் என வரூஉம் குமர குருபரர் வாக்கும் (திருவாரூர் நான்மணிமாலை) ஈண்டு நினைவு கூறற்பாலது.

நூல் : பணம் (1953), பக்கம் - 15
நூலாசிரியர் : ரெ. சேஷாசலம், எம்.ஏ.,
(ம. தி. தா. இந்துக் கல்லூரி பொருளாதார ஆசிரியர்)
Under wear – உள் அங்கி

ஹிரோ ஹிடோ - ஜப்பானிய சக்கிரவர்த்தி ஓர் உடையை ஒரு முறைக்கு மேல் மறுமுறை உபயோகப்படுத்துவதில்லை. உள் அங்கி கூட (Under Wear) மறுமுறை அணிவதில்லை.

நூல் : தம்மி, 10.10.1953, பக்கம் :12, மலர் : இதழ் 2
சொல்லாக்கம் : தில்லை வில்லாளன், பி.ஏ. (ஆனர்ஸ்)