பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

உவமைக்கவிஞர் சுரதா


புலவர் தி. நா. ஞானப்பிரகாசம் - அறிவு ஒளி
முகவரி : 2 / 25 இணைவு - 2,
பூங்குன்றனர் தெரு, மறைமலை நகர் - 603 209
Axis - அச்செலும்பு

இந்த 33 எலும்புகளில் ஒன்று அச்செலும்பு என்னும் பெயரும், இன்னொன்று உலகம் என்னும் பெயரும் பெற்றுள்ளனவே.

நூல் : பழந்தமிழரும் முருகன், முக்கண்ணன் வணக்கமும் (1954)
பக்கம் - 46
நூலாசிரியர் : டாக்டர் தி. இரா. அண்ணமலைப் பிள்ளை
கமகங்கள் - அசைவுகள்

நம் நாட்டவர்கள் சங்கீத விஷயங்களுக்கு முதலிடம் கொடுத்தார்களே தவிர பாவனைகளைப் பற்றியோ, பாடல்களின் உச்சரிப்பைப் பற்றியோ சிந்தித்தார்களில்லை, அதனாலேயே நம் நாட்டுப் பாடல்களின் பெட்டில் பொதுமக்கள் கவர்ச்சி கொள்ளாமல் பிறநாட்டு மெட்டுகளையே அமைத்துக் கொண்டு பாடுவதும், ஆடுவதும் ரசிப்பதும் வழக்கத்தில் அதிகமாகி விட்டது. இதற்குக் காரணங்கள் நம் நாட்டுப் பாடல்களில், பதங்களைச் சரியாக உச்சரிக்காமையும், பதங்களைக் கேட்பவர்கள் புரிந்து கொள்ளதவாறு அதிகமான சங்கீதத்தின் அசைவுகளை (கமகங்களை) அளவுமீறி உபயோகப்படுத்துதலும் ஆகும.

நூல் : தென்னிந்திய இசை உலகம் (1954)
பக்கங்கள் : 27, 28
நூலாசிரியர் : எஸ். மாணிக்கம் (தென் ஆப்பிரிக்கா)
Lyric – தனிப்பாடல்
நூல் : புதுமைப்பித்தன் கட்டுரைகள் (1954) பக்கம் 56,
நூலாசிரியர் : புதுமைப்பித்தன்