பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

உவமைக்கவிஞர் சுரதா


மனிதன் அனல்நிலை (Temperature), அனலளவு (Quantity of Heat) இவைகளை அளந்து அறிய ஆசைப்பட்டான். இவ்வாசையினால் உந்தப்பட்ட மனிதன் தனது இடையறாத உழைப்பினாலும் சிந்தனையாலும் தனது முயற்சியில் வெற்றி கண்டான். முயற்சி திருவினையாக்கும், முயற்சியின்மை இன்மை புகுத்திவிடும் என்பது தமிழன் கண்ட உண்மை அன்றோ? இம்முயற்சியின் பயனாக அனல் நிலையை அளக்க ஒரு கருவியைக் கண்டுபிடித்தான். அதற்கு அனற்கோல் (Thermometer) என்று பெயரிட்டான்.

இதழ் : திராவிடன் குரல், பொங்கல் மலர் (1956) பக்கம் : 64
அ. வி. இராசன்
ஸ்ரீலஸ்ரீ - உயர்சீர்த்தி (1956)

நல்லவராய் வாழ்க!
உயர் சீர்த்தி குன்றக்குடி அடிகளாருக்கு

குறிப்பு : உயர்சீர்த்தி - இச்சொல் ஸ்ரீலஸ்ரீ என்பதைச் சுட்டும் பழந்தமிழ்ச் சொல்.

கா. சம்பத்து
மதுக்கூர் (1956)
வாக்கியம் - சொற்கூட்டம்

சொற்கள் தொடர்ந்து நின்று, முடிவு பெற்ற கருத்து ஒன்றினைத் தெரிவித்தால், அச்சொற் கூட்டம் வாக்கியம் ஆகும். அதனை, வசனம் என்றும் சொல்வதுண்டு.

நூல் : பயிற்சித் தமிழ் (1956) (இரண்டாம் பாகம்), பக்கம் : 1
நூலாசிரியர் : தென் புலோலியூர், மு. கணபதிப்பிள்ளை
பஞ்சாட்சரம் - அஞ்செழுத்து

அஞ்செழுத்து என்பவர் சிறந்த கவிஞர். இவருக்குப் பஞ்சாட்சரம் என்று பெற்றோர் பெயரிட்டனர். அப்பெயரை மாற்றி அஞ்செழுத்து என்று 1957ஆம் ஆண்டில் இவர் வைத்துக் கொண்டார்.

வளனரசு (1957)