உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

181


அபேஷகர் - வேட்பாளர் (1957)

நூல்களைத் தேடிவாங்கிப் படிக்கும் ஆர்வலர், நூலகத்தும்பி, அறிவுத் தேனி

ஊ. செயராமன்

லிப்ஸ்டிக் - செந்நிறக்குச்சி
கொவ்வை - உதடுகளைக் குறிக்கும்

செந்நிறக் குச்சி ஒன்றால்
சிவப்பேற்றி மெருகிட்டு
எச்சிலோ, நாக்கோ
இடறிப் படாவண்ணம்
மிக்க கருத்துடனே
அதைக் காப்பர்

இதழ் : எழிலன் கவிதைகள் (1957) பக்கங்கள் 19, 20
நூலாசிரியர் : வலம்புரி எழிலன்
ஆர்வகர் சங்கம்

சினிமா ரசிகர்கள் சங்கத்தை, "விசிறிகள் சங்கம்’ என்றோர், ரசிகர் சங்கம் என்றோ அழைப்பதை விட ஆர்வகர் சங்கம் என்று அழைக்கலாம்.

டாக்டர் ஏ.சி. செட்டியார் (19. 6. 1960)

காளி - கருநிறமுடையவள்
துருவன் - அழிவில்லாதவன்