பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

உவமைக்கவிஞர் சுரதா


வேதனம் - அறிவு
பாததீர்த்தம் - அடிபெய்புயல்
நூல் : வாயுசங்கிதை (வரோதி ௵ ஆவணி)
நூலாசிரியர் : குலசேகர வரகுணராம பாண்டியர்
ஆய்வாளர் : பொம்மபுரம் ஸ்ரீ சிவஞான பாலைய தேசிகராதீனத்துச்

சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள்

பாங்கு

(Bank) பேங்க் என்பதற்கு வங்கி என்பது பொருள் கொடா வகையில் இருப்பதால் (பணத்தையும் வரவு செலவையும் பாங்கு செய்யும் அமைப்பு என்று) பொருள் படும் நிலையில், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாங்கு எனவே கொள்ளலாம். தனியார் ஏற்பாடுகளுக்கு, வட்டிக்கடை, காசுக்கடை என்ற பழஞ்சொல்களே இருக்கலாம்.

வெங்கடாசலம் வாழ்வியல் (திங்களிருமுறை ஆசிரியர்)
இதழ் : வாழ்வியல் 2வது ஏடு, 15-9-1960, பக்கம் : 18
Fountain – இலவந்திகை

இக்காலத்தில் நீரைக் குறைத்தும் பெருக்கியும், அலங்காரமாக வெளியிடும் நீர் ஊற்றினை Fountain என்கிறோம். இது பெரிதும் சோலைகளில் இருப்பதையும் அறிகிறோம். இவ்வமைப்புக்குத் தமிழர்கள் அக்காலத்தில் இட்ட பெயர் இலவந்திகை என்பது.

நூல் : தமிழ் நூல் வரலாறு (1962) பக். 23
நூலாசிரியர் : பேராசிரியர், வித்துவான் பாலூர்
கண்ணப்ப முதலியார், எம்.ஏ.பி.ஓ.எல். தமிழ்த்துறைத் தலைவர், புதுக்கல்லூரி சென்னை.
Under Ground Drainage – கரந்து படை

இக்காலத்தில் Under Ground Drainage எனப்படும் கழிநீர் செல்லக் கட்டப்படும் அமைப்பு, பழங்காலத்தில் கரந்து படை எனப்பட்டது. இது தெரு