உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

183


நடுவில் அமைந்தது. கருங்கல்லால் மூடப்பட்டது. இக்காலத்தில் இரும்பு வட்டக் கருவியால் மூடப்பட்டுள்ளது.

நூல் : தமிழ் நூல் வரலாறு (1952) பக்கம் : 23
நூலாசிரியர் : பேராசிரியர், வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார் எம்.ஏ., பி.ஓ.எல்.,
ரீடர் - நூல் ஆய்வர்

வெள்ளை வாரணனார் இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரீடராக (நூல் ஆய்வர்) இருக்கிறார். நல்ல பேச்சாளர். வித்துவான் பட்டம் பெற்றவர். தொல்காப்பியம், சங்க காலத் தமிழ் மக்கள், குறிஞ்சிப் பாட்டராய்ச்சி நூல்கள் இவரால் எழுதப்பட்டுள்ளன. சித்தாந்தச் செம்மல், திருமுறைத் தமிழ் மணி என்னும் பட்டமுடையவர்.

மேற்படி நூல் : தமிழ் நூல் வரலாறு (1962) பக்கம் : 448
தாமரைக்கண்ணி

என் இயற்பெயர் ஜலஜாட்சி என்பது. 1938ல் நடந்த இந்தி எதிர்ப்பு இயக்கத்தின்போது புலவர் அன்பு கணபதி அவர்களும் யான் தந்தையெனப் போற்றும் அருணகிரி அடிகளாரவர்களும் என் பெயரைத் தாமரைகண்ணி என மாற்றிவிட்டார்கள். யான் அதனை விருப்புடன் ஏற்றுக்கொண்டேன்.

தாமரைக் கண்ணி 15. 10. 1961

இதழ் : முக்கனி மரம் - 1 கனி - 5
காயிதம்

Paper என்பதற்கு தாள் என்பதைவிட, கா + இதம் (எழுதிய நூலை இனிது காத்தற்குரிய என்ற பொருள்பட) காயிதம் என்றே கொள்ளலாம்.

- பி.எம். வேங்கடாசலம்
ஆசிரியர் : வாழ்வியல் (திங்களிருமுறை)
2வது ஏடு, தி.வ. ஆண்டு 1991 புரட்டாசி - 1, பக்கம் : 18
16.9.1960