பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

185


Treadle - மிதித்தியக்கும் அச்சுப் பொறி

1933இல் கல்விக் கழகத்துக்கு மிதித்தியக்கும் அச்சுப் பொறி (Treadle) ஒன்று வாங்கி ஒர் அச்சகம் நிறுவப் பெற்றது.

இதழ் : செந்தமிழ்ச் செல்வி, மார்ச் 1973, சிலம்பு : 47; பரல் - 7 பக்கம் : 366
கட்டுரையாளர் : வ. சுப்பையா பிள்ளை
Complimentary Copy- அன்பிதழ்
இதழ் : விடுதலை, நாள் :10, 7. 2001
ஜெராக்ஸ் - ஒளியச்சு
மு. இளங்கோவன்
தமிழ் ஆராய்ச்சியாளர்
பாரதிதாசன் பல்கலைக் கழகம்
திருச்சிராப்பள்ளி - 620 024
(6. 12, 95 - அவர் எழுதிய கடிதத்திலிருந்து)
Border - வரம்புகள்

பூஞ்செடிகளைக் சூழ்ந்து கோலப்பட்டிருக்கும் வரம்புகளில் விதவிதமான கள்ளிகளும், கீரைகளும், புற்களும், சிறு செடிகளும் உள்ளன. ஐரோப்பியரது பங்களாக்களிலேயே பூக்கள் பறிக்கப்படாமல், கொத்துக் கொத்தாகச் செடிகளிலே புன்முறுவல் தவழும் இன்முகத்துடன் மிளிர்கின்றன.

நூல் : தமிழ்நாடு பயணக் கட்டுரைகள் (1968), பக்கம் : 147
எழுதியவர் : அரு. சோமசுந்தரம், ஊழியன் 21-9.1926
தமிழ் வாரப் பத்திரிகை, காரைக்குடி.
தொகுப்பு : ஏ. கே. செட்டியார்