பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

உவமைக்கவிஞர் சுரதா


Under Ground Drainage – புதை சாக்கடை

'எனக்கு அண்டர்கிரவுண்ட் ட்ரெயினேஜ்' என்பதற்குத் தமிழில் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. நினைத்துக் கொண்டேயிருந்தேன்; சரியான சொல் கிடைக்கவில்லை. சில திங்கள் சென்றபின் ஒரு சிற்றுருக்குச் சென்றிருந்தேன்; அங்குள்ள ஒருவரிடம் என்னய்யா உங்களூரில் வளர்ச்சித் திட்டங்களெல்லாம் எப்படி? என்று கேட்டேன். அவர் விளக்குகள், சாலைகள் போடுவது போன்றவற்றைக் கூறிவிட்டுப் 'புதை சாக்கடையும்' அமைக்கப் போகிறார்கள் என்றார்.

எனக்குப் புதையல் கிடைத்தது போல தனித்தமிழ்ச் சொல் கிடைத்தது. Under Ground Drainageகுப் புதை சாக்கடை என்ற சொல் எவ்வளவு பொருத்தம். இது போன்ற வளமான சொற்களைக் கொண்டவர்கள் நாம்.

இதழ் : தமிழ்ப் பாவை 7, 11 1967), மலர் -7 இதழ் - 11
சொற்பொழிவாளர் : கி. ஆ. பெ. விசுவநாதன்